Published : 30 Nov 2019 08:40 AM
Last Updated : 30 Nov 2019 08:40 AM

கிறிஸ்துமஸ், பொங்கலையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு கட்டண ரயில்கள்

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் இருந்து டிசம்பர் 23, 25, 30, ஜன. 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29, பிப். 3, 5-ம் தேதி களில் இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06068) மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல், தாம்பரத்தில் இருந்து டிச. 24, 26, 31, ஜனவரி 2, 7, 9, 16, 21, 23, 28, 30-ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06067) மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையில் இருந்து டிச.28, ஜன.4, 11, 18, 25, பிப்.1-ம் தேதி களில் இரவு 7.45 மணிக்கு புறப் படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06074) மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து டிச. 29, ஜன. 5, 12, 19, 26 பிப். 2-ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (06073) மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை செல்லும்.

அதேபோல், நெல்லையில் இருந்து ஜன.2, 9, 23, 30 பிப். 6-ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் (06072) மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து ஜன. 3, 17, 24, 31, பிப்.7-ம் தேதிகளில் இரவு 7.15 மணிக்கு புறப்படும் ரயில் (06071) மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும், நெல்லையில் இருந்து டிச. 22, ஜன. 5, 12, 26 பிப்.2-ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும். ரயில் (06070) மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 20, 27 பிப்ரவரி 3-ம் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06069) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும்.

இதேபோல், கோயம்புத்தூர் - சந்திரகாச்சி இடையே டிசம்பர் 6, 13, 20, 27-ம் தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (நவ.30) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x