Published : 29 Nov 2019 10:26 AM
Last Updated : 29 Nov 2019 10:26 AM

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு திட்டம்: துடியலூர் பகுதிக்குட்பட்ட 30 இடங்களில் அமல் - குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்

கோப்புப் படம்

டி.ஜி.ரகுபதி

கோவை 

குற்றச் சம்பவங்களை தடுக்க, துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதுடன், 6 காவல் நிலை யங்களில் ரோந்து குழுவும் அதிகரிக் கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் 5 உட்கோட்டங்களும், 35 காவல் நிலையங்களும் உள்ளன. அடிதடி, திருட்டு, தகராறு, வழிப்பறி, கொள்ளை உட்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக, மாவட்டப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். புறநகர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் பகல், இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப நாட்களாக மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றன.

பெ.நா.பாளையத்தில் 64 வழக்கு

கடந்த 19-ம் தேதி கவுண்டம் பாளையம் லூனா நகரிலுள்ள வீட்டில், 134 பவுன் நகை, ரூ.15 லட்சம் தொகை திருடப்பட்டது. சமீபத்தில், செட்டிபாளையத்தில் 19 பவுன் திருட்டு, துடியலூரில் 24 பவுன் திருட்டு, வெள்ளக் கிணறில் 167 பவுன் திருட்டு என, திருட்டு சம்பவங்கள் தொடர்ந் தன. குறிப்பாக, பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டத்தில் மட்டும் நடப்பு ஆண்டு இதுவரை 64 வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்ற வாளிகளை பிடிக்க காவல்துறை யினர் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுடன் நல்லுறவை மேம்படுத்துவது, ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை யும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கூடுதல் காவல் கண்காணிப் பாளர் அனிதா கூறும்போது, ‘‘துடியலூர் காவல் நிலைய எல்லை யில், தொடர் குற்றங்கள் நடக்கும் 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஓர் இடத்துக்கு ஒருவர் என 30 காவலர்கள் பிரித்து ஒதுக்கப் பட்டுள் ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்பு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்வர். பரஸ்பரம் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொள்வர்.

சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் தெரிந்தால், உடனடி யாக சம்பந்தப்பட்ட காவலரிடம் மக்கள் தெரிவிப்பர். அங்கு காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படும். மேலும், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்று வோரின் விவரங்களையும் சேகரித்து வைத்திருப்பர்.

இத்திட்டம், கடந்த 21-ம் தேதி முதல் துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்’’ என்றார்.

‘டெடிக்கேட்டட் பீட் சிஸ்டம்’

மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சுஜித்குமார் கூறும்போது, ‘‘குற்றச் சம்பவங்களை கட்டுப் படுத்த, சம்பந்தப்பட்ட பகுதிகளில் காவல் கண்காணிப்பை தீவிரப் படுத்தினாலும், பூட்டியிருக் கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில், உள்ளே புகுந்து நகை, பணத்தை லாவகமாகச் திருடிச் சென்றுவிடுகின்றனர். இதையடுத்து, குற்றச் சம்பவங் கள் நடக்கும் பகுதிகளில் ‘டெடிக்கேட்டட் பீட் சிஸ்டம்’ திட்டத்தை அமல்படுத்த டிஜிபி உத்தரவிட்டார்.

அதன்பேரில், பெரியநாயக்கன் பாளையம், துடியலூர், அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம் பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 6 பீட் ஏற்படுத்தப்பட்டு, இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, மேற்கண்ட காவல் நிலையங்களில் தலா 12 பீட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீட் ரோந்துக் குழுவிலும் 2 காவலர் கள் இருப்பர். இரவு 10 முதல் காலை 6 மணி வரை ரோந்து செல்வர். இத்திட்டம், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலை யங்களுக்கு விரைவில் விரிவுபடுத் தப்படும்’’ என்றார்.

70-க்கும் மேற்பட்ட திருட்டு

மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘சரவணம்பட்டி, பீளமேடு, சிங்காநல்லூர், சாயிபாபா காலனி, போத்தனூர், குனியமுத் தூர் ஆகிய காவல்துறை எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில், நடப்பு ஆண்டு 70-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க, மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x