Last Updated : 26 Nov, 2019 07:34 PM

 

Published : 26 Nov 2019 07:34 PM
Last Updated : 26 Nov 2019 07:34 PM

சிறைபிடித்துள்ள இந்திய மீனவப் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்: யாழ் மாவட்ட மீனவர் சம்மேளனம் கோரிக்கை 

சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராபக்ச வரும் நவ.29-ல் டெல்லியில் இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது இலங்கை அதிபரிடம் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின் போது , தங்களது நிலைப்பாட்டையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனம் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே. தவச்செல்வன், செயலாளர் அ.அன்னராசா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, நின்று போயுள்ள இலங்கை, இந்திய மீனவர்களது பேச்சுக்கள் தொடர புதிய இலங்கை அரசு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றங்களால் எல்லை தாண்டும் இரண்டு தரப்பு மீனவர்களையும், இரு நாட்டு கடற்படையும் கடற்பகுதியிலேயே விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவப் படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.

பிரதேசங்களுக்கு ஏற்ப மீன்பிடி முறைகளுக்கான நடைமுறைகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்திய தூதரகமும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x