Published : 25 Nov 2019 09:21 PM
Last Updated : 25 Nov 2019 09:21 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு;  பணியிடங்கள் 6491-லிருந்து 9398 ஆக அதிகரிப்பு


தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 -க்கான பணியிடங்களை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி பழைய பணியிடங்க 6491 ஆக இருந்த நிலையில் கூடுதலாக 2907 இடங்கள் கூட்டப்பட்டு 9389 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


“தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் குரூப்- 4 தேர்வுக்கான 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளுக்கான 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கையினை வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த செப்.1 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.


இதன் தேர்வு முடிவுகள், அதாவது தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது தரவரிசை ஆகியன கடந்த 12.11.2019 தேதி வெளியிடப்பட்டது அன்று வெளியிடப்பட்டது. இதனிடையே, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6491 லிருந்து 9398 ஆக உயர்ந்துள்ளது.


உயர்த்தப்பட்ட பணியிடங்கள் துறைவாரியாக:

1. கிராம நிர்வாக அலுவலர் முன்னர் 397-ஆக இருந்தது, தற்போது 607- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


2. இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) முன்னர் 2688-ஆக இருந்தது.


3. இளநிலை உதவியாளர் (பிணையம்) முன்னர் 104-ஆக இருந்தது.

4. வரித்தண்டலர் நிலை -1 34- ஆக இருந்தது இவை அனைத்தும் மொத்தமாக சேர்த்து 2826-ஆக இருந்தது தற்போது 4558 - ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


5. தட்டச்சர் பணியிடம் முன்னர் 1901- ஆக இருந்தது, தற்போது 2734 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


6. சுருக்கெழுத்து – தட்டச்சர் நிலை III - முன்னர் 784- ஆக இருந்தது, தற்போது 994- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


7. நில அளவர் முன்னர் 509 - ஆக இருந்தது, தற்போது 505- ஆக குறைக்கப்பட்டுள்ளது


8.வரைவாளர் பணி முன்னர் 74 ஆக இருந்தது தற்போது காலிப்பணியிடங்கள் திரும்பப்பெறப்பட்டன)


இதுவரை இருந்த மொத்த பணியிடம் 6491- ஆக இருந்தது , தற்போது அது 9398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தற்போது அதிகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கென தேர்வு செய்யப்படவுள்ள தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்”.


இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார், தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x