Published : 10 Nov 2019 08:09 AM
Last Updated : 10 Nov 2019 08:09 AM

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஓட்டுநர், நடத்துநர் போதையில் உள்ளனரா என்று சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும்: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குடிபோதையில் உள்ளனரா என்பதை அவ்வப்போது சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரசு போக்குவரத்துக் கழக திருவொற்றியூர் கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஜி.கண்ண பிரான் கடந்த 1989-ம் ஆண்டு குடிபோதையில் பேருந்தை இயக்க முடியாமல், பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்டதாக குற் றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப் பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அவர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் பணிவழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் குடிபோதை யில் பணியில் இருப்பதைத் தடுக்க என்னென்ன முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘‘ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குடிபோதையில் பணி யில் இருந்தால் அவர்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க ஏது வாக அந்தப் பேருந்துகளில் சம் பந்தப்பட்ட கிளை மேலாளர்களின் தொலைபேசி எண்கள் பயணிகளின் பார்வையில்படும்படி எழுதி வைக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே கிளம்பும்போதே அந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போதை யில் உள்ளனரா என்பதை பாது காவலர்கள் தாங்கள் வைத்திருக் கும் சுவாசக் கருவி மூலமாக பரிசோதிப்பர்.

ஒருவேளை குடிபோதையில் அவர்கள் யாராவது இருப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பேருந்தை, பணிமனையை விட்டு வெளியேற அனுமதியளிப்ப தில்லை. அதேபோல பேருந்து நிலையங்களிலும் கண்காணிப் பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்டிப் பாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பதிவேட்டில் கையெழுத்திட அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் குடி போதையில் இருப்பது தெரியவந் தால், அவர்களுக்கு பதிலாக வேறு ஊழியர்களைக் கொண்டு பேருந்தை இயக்கவும், சம்பந்தப் பட்டவர்கள் மீது புகார் அளிக்கவும் அந்த கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பேருந்துகளை நடுவழியில் சென்று பரிசோதிக் கும் போக்குவரத்து கண்காணிப் பாளர்கள் அந்தப் பேருந்தின் ஓட்டு நர் மற்றும் நடத்துநர் குடிபோதை யில் இருக்கிறாரா என்பதை பரிசோதிக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

ஒருவேளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியின்போது குடி போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியில் கடுமையான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்து இருந்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குடிபோதையில் உள்ளனரா என்பதை அவ்வப் போது சோதனை நடத்தி கண் காணித்து, உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் உள்ள ஒழுங்குமுறை விதிகளையும் அதி காரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’’ என அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாக இயக்கு நர்களுக்கு உத்தரவிட்டு விசா ரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x