Published : 08 Nov 2019 08:46 AM
Last Updated : 08 Nov 2019 08:46 AM

மாநில அரசு திட்டங்களின் வளர்ச்சி இலக்குக்கு இணையதளம்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழக அரசு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான நீடித்த, நிலைத்த வளர்ச்சி இலக்குக்கான இணையதளம் மற்றும் கண்காணிப்பு பலகையின் செயல்பாட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தின் நீடித்த, நிலைத்தவளர்ச்சி இலக்குக்காக பல்வேறுதுறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை, அதன் தரவுகள் அடிப்படையில் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் பிரத்யேக இணையதளம் (tnsdg.tn.gov.in) மற்றும் இணையதள கண்காணிப்பு பலகை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் தங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான தரவுகளை உடனுக்குடன் நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் பின்தங்கியவட்டாரங்கள், ஏனைய வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களின் வளர்ச்சி தரவரிசைப்படுத்தப்படும்.

இதனால், திட்டங்களின் முன்னேற்றத்தை மக்கள் பிரதிநிதிகள், துறைத் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்துகொள்ள முடியும். இதுதொடர்பான அனைத்து பணிகளும்திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கான இணையதளம், கண்காணிப்பு பலகையின் செயல்பாட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் ஜெய ரகுநந்தன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், திட்டக்குழு உறுப்பினர் - செயலர் அனில் மேஷ்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x