Published : 04 Nov 2019 11:32 AM
Last Updated : 04 Nov 2019 11:32 AM

மதுரையில் பேரிடர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்

மதுரை

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாமை மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நிர்வாகம் திட்டமிட்டது. முதலில் மதுரை மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு முகாமைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று (நவ.4) காலை 8.30 மணியளவில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

இதில் வருவாய் செயலர்,வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பேரிடர் கால சவால்களை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் எப்படியெல்லாம் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் இந்த முகாமில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள துறை அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். விழிப்புணர்வு முகாமின் ஒருபகுதியாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் மதுரையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஸ்ரீநிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x