Published : 03 Nov 2019 08:43 AM
Last Updated : 03 Nov 2019 08:43 AM

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தேமுதிகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே, அடுத்த தாக வரவுள்ள உள்ளாட்சித் தேர்த லில் 2 மாநகராட்சிகள் உள்ளிட்ட 20 சதவீத இடங்களைக் கேட்க வும் தேமுதிக முடிவு செய் துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றி ருந்த தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழு வியது. இதற்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வியை சந்தித் தது. இதுபோன்ற அடுத்தடுத்த தோல்விகள் அக்கட்சியின் நிர்வாகி கள், தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி

இதற்கிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட் டணி வெற்றி பெற்றுள்ளது தேமுதிக வினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவின் தேர்தல் பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்திருப்பதாகவும், விரை வில் நடைபெறவுள்ள உள்ளாட் சித் தேர்தலில் அதிமுக கூட்ட ணியில் தேமுதிக இடம் பெறு வதும் உறுதியாகியுள்ளதாக அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக சிறப்பாக இருக்கிறது. தோழமைக் கட்சி களுடன் இணைந்து பணியாற்றுவ திலும் நல்ல இணக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. சமீபத்தில் நடை பெற்ற சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாங்கள் இணைந்து பணியாற்றியதன் மூலம் அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தொண்டர்கள் விருப்பம்

இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவின் தேர் தல் பிரச்சாரம் தேமுதிக தொண்டர் கள் மத்தியில் உற்சாகத்தை ஏற் படுத்தியுள்ளது. அடுத்த தேர்தலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற தேமுதிக தொண்டர்களும் விரும்புகின்றனர்.

இதற்கிடையே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்களைக் கேட்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக, 2 மாநகராட்சி இடங் களைக் கேட்க உள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி பேச்சுவார்த்தையும் தொடங்குவோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் கடைசி வரையில் குழப்பம் நீடித்தது. சில கட்சிகளுக்கு முன்கூட்டியே தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விடுவதால், அடுத்தடுத்து வரும் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள இடங்களை ஒதுக் கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை

எனவே, கூட்டணி கட்சிகளுக் குள் எந்தவித குழப்பமும் இன்றி இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இடங்களை ஒதுக்க வேண்டு மென நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x