Published : 30 Oct 2019 11:30 AM
Last Updated : 30 Oct 2019 11:30 AM

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற சட்டப்பேரவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்று தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக் கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் முதலில் தங்களின் பெயரை தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தங்கள் சட்டப்பேரவை தொகுதிக் கான வாக்காளர் பதிவு அலுவல ரிடமோ அல்லது ‘‘http://www.nvsp.in” என்ற இணையதளத்தின் வாயிலாகவோ தங்களின் பெயரை தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டி யலில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்க இயலாதவர்கள் தொடர் புடைய சட்டப்பேரவை தொகுதிக் கான வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அல்லது வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தொடர்புடைய மண்டல அலுவலகத்திலோ அல்லது சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர், தேர்தல் (பொது) பிரிவிலோ விண்ணப் பித்துக் கொள்ளலாம்.

சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் திருத்தம் அல்லது மாறுதல் கோரி விண்ணப்பிப்பதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவித் துள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020 பட்டியலுக்காக நவம்பர் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அவ்வாறு, தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னரே தொடர்பு டைய உள்ளாட்சி அமைப்புகளுக் கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் படும். தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் வாக் காளர் பெயர் இடம் பெற்றால்தான் வருகிற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க இயலும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x