Published : 30 Oct 2019 10:55 AM
Last Updated : 30 Oct 2019 10:55 AM

நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிக்கும்போது உயிரை பாதுகாத்து கொள்வது எப்படி? - மீன்வளத் துறை அதிகாரிகள் விளக்கம்

மு.யுவராஜ்

சென்னை

கடலில் தத்தளிக்கும்போது உயிரை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து மீனவர்களுக்கு மீன்வளத் துறை விளக்கம் அளித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங் கிய நிலையில், வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது கடல் சீற்றமுடன் காணப்படும். இத்த கைய நேரங்களில் கடலில் படகு விபத்துள்ளாகும் அபாயமும் ஏற் படும்.

அண்மையில் அரபிக்கடலில் 30 விசைப்படகுகளில் மீன்பிடித் துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் ‘க்யார்' புயலில் சிக்கினர். 17 படகுகள் கோவா, குஜராத், மகாராஷ்டிரா மீன்பிடி துறைமுக பகுதிகளில் கரைசேர்ந்தன. 230 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட னர். மீதமுள்ள படகுகளை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

எஸ்ஓஎஸ் பட்டன்

இவ்வாறு, கரை ஒதுங்க வழி யில்லாமல் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் தங்களை பாது காத்து கொள்ள எத்தகைய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள் ளனர். அதன் விவரம் வருமாறு:

கடலுக்குச் செல்லும்போது மீனவர்கள் பாதுகாப்பு உப கரணங்கள், உயிர்காக்கும் கவசம், விஎச்எப் கருவி உள்ளிட்டவற்றை படகில் எடுத்துச் செல்ல வேண்டும். ஆபத்து காலத்தில் விஎச்எப் கருவி தண்ணீரில் விழுந்தாலும் அதன் ஒருபகுதியில் எஸ்ஓஎஸ் பட்டன் பொறுத்தப்பட்டிருக்கும். அவற்றை அழுத்தினால் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். இதுமட்டுமின்றி, யாரெல் லாம் அருகில் உள்ள படகில் விஎச்எப் கருவியை பயன்படுத்து கிறார்களோ அவர்களுக்கும் தகவல் பரிமாறப்படும்.

தீப்பிடித்தால் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும். அதேபோல் தீயணைப்பு கருவி, உயிர்காக்கும் கவசம் ஆகியவற்றில் உள்ள பட் டனை அழுத்த வேண்டும். அவ் வாறு செய்வதன் மூலம் ஜிபிஎஸ் மூலம் ஆபத்தில் இருப்பவர் இருக்கும் பகுதி துல்லியமாக கண்டறியப்படும். இதன்மூலம், சுலபமாக சென்று மீனவர்களை மீட்க முடியும்.

படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானால் உயிர்காக்கும் கவசத்தில் இருக்கும் விசிலை ஊத வேண்டும். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x