Published : 29 Oct 2019 09:07 AM
Last Updated : 29 Oct 2019 09:07 AM

தீபாவளி தினத்தில் சவுக்கார்பேட்டையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக காற்று மாசு: தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தகவல்

சென்னை

தீபாவளி பண்டிகையன்று சென்னை சவுக்கார்பேட்டையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக இருந்தது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி நாளன்று சென்னை யில் 5 இடங்களில் காற்றின் தரத்தை பரிசோதித்து, அதில் மிதக்கும் நுண்துகள்கள் பிஎம்10 (10 மைக் ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசு), மிதக்கும் நுண்துகள்கள் பிஎம்2.5 (2.5 மைக்ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசு), கந்தக டை- ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன்- டை ஆக்ஸைடு மற்றும் ஒலி மாசு தொடர்பாக கண்காணிக்கப்பட்டது.

தீபாவளி நாளன்று 10 மைக்ரான் அளவு கொண்ட மிதக்கும் நுண்துகள்கள் 84 மைக்ரோ கிராம் முதல் 128 மைக்ரோ கிராம் வரை கண்டறியப்பட்டன. 2.5 மைக்ரான் அளவு கொண்ட மிதக்கும் நுண்துகள்கள் 48 மைக்ரோ கிராம் முதல் 62 மைக்ரோ கிராம் வரை கண்டறியப்பட்டன.

சற்றே கூடுதல்

10 மைக்ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசில் 100 மைக்ரோ கிராம், 2.5 மைக்ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசில் 60 மைக்ரோ கிராம் அனுமதிக்கப்பட்ட அளவாகும். அனைத்து காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலும் நுண்துகள்களின் அளவு நிர்ண யிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டே இருந்தன.

சவுக்கார்பேட்டை கண்காணிப்பு நிலையத்தில் மட்டும் மிதக்கும் நுண்துகள்கள் 10 மைக்ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசில் 128 மைக்ரோ கிராமாகவும், 2.5 மைக் ரான் அளவு கொண்ட நுண்ணிய மாசில் 62 மைக்ரோ கிராமாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்றே கூடுதலாக இருந்தன.

அனைத்து காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களிலும் கந்தக டை - ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை - ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை காட் டிலும் குறைந்தே காணப்பட்டன.

வளிமண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன் 55 டெசிபலில் இருந்து 73 டெசிபல் வரை இருந்தது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

தீபாவளி அன்று 67 டெசிபலில் இருந்து 84 டெசிபல் வரை இருந்தது. வளிமண்டல காற்று மற்றும் ஒலி மாசு குறைந்ததற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உள்ளிட்ட இதர அரசுத் துறைகள் மற்றும் ஊடகங்களின் விழிப்புணர்வு பிரச்சாரமும் காரணமாகும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x