Published : 23 Oct 2019 10:28 AM
Last Updated : 23 Oct 2019 10:28 AM

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் காலத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின் றன. அதன்படி பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த தேர்வு மதிப்பெண்கள் 1,200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டது. அதா வது ஒரு பாடத்துக்கான தேர்வு மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. அதற்கேற்ப தேர்வு நேரமும் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக மாற்றப்பட்டது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ் உட்பட மொழித்தாள் ஒரே தாளாக மாற்றப்பட்டது.

இதற்கிடையே 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் கூடுதல் பாடங்களுடன் சற்று கடினமாக இருப்பதாக கருத்து கள் எழுந்துள்ளன. மேலும், தற் போதைய பாடப் புத்தகங்களின்படி தேர்வு எழுத 2.30 மணி நேரம் போதுமானதாக இல்லை. எனவே, தேர்வு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிரமங்கள் இருப்பதால் தேர்வு எழுதும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மொழிப்பாடத் தேர்வு கள் ஒரே தாளாக மாற்றப்பட் டுள்ளதால் தற்போதுள்ள 2.30 மணி நேரம் மாணவர்களுக்கு தேர் வெழுத போதுமானதாக இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அனைவரின் கோரிக்கையை ஏற்று, முதல்வரின் ஒப்புதல் பெற்று தேர்வு எழுதும் காலம் 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கேள்வி களை நன்கு புரிந்து பதட்டமின்றி தேர்வெழுத முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x