Published : 06 Jul 2015 09:48 AM
Last Updated : 06 Jul 2015 09:48 AM

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு கலந்தாய்வு நிறைவு: 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (சனிக் கிழமை) முடிவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் (தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு) சேர 3,500-க் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 2,760 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

பயிற்சி பள்ளியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு சனிக்கிழமை முடிவடைந்தது. கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் 1,510 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x