Published : 21 Oct 2019 07:28 AM
Last Updated : 21 Oct 2019 07:28 AM

இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

விழுப்புரம் / திருநெல்வேலி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான எல்லா ஏற்பாடு களும் நிறைவடைந்துள்ளன.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு, ஆண் வாக்காளர்கள் 1,11,607, பெண் வாக்காளர்கள் 1,11,546, திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற் றுபவர்கள் 209 பேர் என மொத்தம் 2,23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

103 கிராமங்களுக்கு உட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் 1,333 பணி யாளர்கள், 29 மைக்ரோ அப்சர்வர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இடைத்தேர்தலையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 848 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் அணி வகுப்பு நடைபெற்றது. மேலும் வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி ஈ.எஸ் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

நாங்குநேரி

நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர். 1,27,389 ஆண் வாக்காளர்கள், 1,29,748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என, மொத்தம் இத்தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர்.

வெப் கேமரா

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ள துடன், தடையில்லா மின்சாரம், குடிநீர், சாய்தளம், கழிப்பறை வசதி ஆகி யவை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 170 வாக்குப் பதிவு மையங்களில் வீல் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 1,460 பேர் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நேற்று 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களுக்கு புறப்பட்டுச் சென்றனர். 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டலக் குழு என, மொத்தம் 29 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு மண்டலக் குழு காத்தி ருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு பணியில் 35 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு 2 இயந்திரங்கள்

16 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத் தப்படுகின்றன. இதற்காக 688 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 404 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. இவை, வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப் புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இயந்திரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 89 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 54 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 96 விவி பாட் இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மின்னணு இயந்திரங்கள் வேட்பாளர் கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் ஏற்றி, வாக்கு எண்ணும் மையமான திரு நெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி யில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும்.

பாதுகாப்புப் பணியில் எஸ்பி, 2 ஏடிஎஸ்பிகள், 17 டிஎஸ்பிகள் உட்பட 2,500 போலீஸார் ஈடுபடுகின்றனர். 73 மையங்களில் உள்ள பதற்றமான 151 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x