Published : 18 Oct 2019 09:18 AM
Last Updated : 18 Oct 2019 09:18 AM

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக பனிப்போர்: இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் களத்தில் அதிமுக - பாஜக இடையே பனிப்போர் நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அதிமுகவினர் தங்களை ஒதுக்குவதாக, உள்ளூர் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது அதிமுக தங்களை ஒதுக்கி வைத்திருந்ததாக பாஜக புகார் தெரி வித்திருந்தது. அதுபோலவே, தற்போது நாங்குநேரி சட்டப் பேரவை இடைத்தேர்தலிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில் பாஜக தலை வர்களைப் பார்க்க முடிய வில்லை. தமிழக முதல்வர், துணை முதல்வரின் பிரச்சாரங்களின் போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிகளுடன் பங்கேற்ற நிலையில், பாஜக கொடிகளை மட்டும் காணவில்லை.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியிருக்கும் நிலை யில், இதுவரை அதிமுக தலைவர் களுடனோ அல்லது அதன் கூட்டணி கட்சி தலைவர்களுடனோ பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

10-க்கும் மேற்பட்ட அமைச்சர் கள் இத்தொகுதியில் முகாமிட்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் இணைந்து தேர்தல் பணியில் பாஜக ஈடுபட வில்லை. பாஜகவினர் தங்களுடன் வருவதை, அதிமுக நிர்வாகிகளும் விரும்பவில்லை.

சென்னையில் சமீபத்தில், முன்னாள் மத்திய இணையமைச் சர் பொன். ராதாகிருஷ்ணனை, தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசியதை அடுத்து, நாங்குநேரி தேர்தல் களத்தில் பாஜக இறங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப் பட்டது. ஆனாலும், தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முழுஅளவில் ஈடுபடவில்லை.

தமிழக முதல்வர் முதற்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் பாஜக நிர்வாகிகளை மட்டுமல்ல, பாஜக கொடிகளைகூட அரிதாகவே காணமுடிந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத் துள்ள கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் தொகுதியில் முகாமிட் டுள்ளனர். ஆனால், பாஜக தலை வர்கள் யாரும் இன்னும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

கடந்த சில நாட்களுக்குமுன், நாங்குநேரியிலுள்ள அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் தெரியவந்ததும், அதுவரை அங்கி ருந்த அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் அவசரமாக வெளி யேறிவிட்டனர். இது பாஜக தலை வர்களுக்கு மிகப்பெரும் ஏமாற் றத்தை அளித்தது. கடைசியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவில்லை.

அதற்கு அடுத்த நாள், பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டில் செய்தி யாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், இடைத்தேர்தல் களத்தில் அதிமுக- பாஜக இடையே நிலவும் விரிசல்கள் குறித்த கேள்விகளுக்கு, மழுப் பலாகவே பதில் தெரிவித்தார். பாஜக நிர்வாகிகளும், தொண் டர்களும் களப்பணியில் ஈடுபட்டி ருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதுபோல், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறும் போது, ``இடைத்தேர்தல் பிரச்சாரத் தில் அதிமுகவினரும், பாஜகவின ரும் இணக்கமுடன் பணியாற்று கின்றனர்” என்றார்.

பாஜக தலைவர்களுடன் பிரச் சாரம் மேற்கொண்டால் இத் தொகுதியிலுள்ள சிறுபான்மை யினர் வாக்குகளை இழக்க நேரிடும் என்று, அதிமுக அஞ்சுவதாலேயே, பாஜகவை அக்கட்சி ஒதுக்கு வதாக தேர்தல் களத்தில் பேசப் படுகிறது. இதையே பாஜக உள்ளூர் நிர்வாகிகளும் தங்கள் மனக்கு முறலாக தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x