Published : 15 Oct 2019 09:59 AM
Last Updated : 15 Oct 2019 09:59 AM

அப்துல் கலாமும்... ஜெய்வாபாய் பள்ளியும்...

திருப்பூர்

திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிதான் நாட்டிலேயே அதிக மாணவிகள் பயிலும் பள்ளியாகும். 2009-ல் இங்கு 7,285 மாணவிகள் பயின்றனர். நான் இப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில், பொருளாளர், செயலர், தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன்.

இப்பள்ளிக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் 2001 முதல் தொடர்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக 7-ம் வகுப்பு மாணவி கள் 6 பேர் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி, அதை இப்பள்ளியில் அமல்படுத்தினர். 2001-ல் டெல்லியில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டுக் கும் இந்த ஆய்வு தேர்வு செய்யப் பட்டிருந்தது. அதில் பங்கேற்ற அப்துல் கலாமை, நானும், மாணவி தமீம் சுல்தானாவும் சந்தித்து, அவ ரது அக்னி சிறகுகள் புத்தகத்தில் கையெழுத்து கேட்டோம். புத்தகம் தமிழில் இருந்ததால், அம்மாணவி யிடம் `என்ன தமிழ் நாடா.? எந்தப் பள்ளி?' என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தினார் கலாம்.

2001-ல் புனாவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தொடங்கிவைத்த கலாம், அதில் இடம் பெற்றிருந்த ஜெய்வாபாய் மாணவி வி.பாரதி யின் ஆய்வுக் கட்டுரை குறித்து கேட்டறிந்தார்.

2002-ல் கலாம் குடியரசுத் தலை வராக இருந்தபோது, ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஜரீன்பானு தேசிய நல்லாசிரியர் விருதை, கலாமிடமிருந்து பெற்றார். அந்த ஆண்டு தேசிய குழந்தைகளின் அறிவியல் மாநாடு மற்றும் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு மாணவி சி.சவீதாவின் ஆய்வுக் கட்டுரை தேர்வானது. அந்த மாநாடுகளை கலாம் தொடங்கிவைத்தார். அவரது புகழ்பெற்ற 10 அம்சத் திட்டத்தை 60 அடி நீளம் கொண்ட துணியில் 10 அடிக்கு எழுதி, மீதிம் 50 அடி நீளத்தில் ஜெய்வாபாய் பள்ளியில் பயிலும் 6,000-ம் மாணவிகள் கையெழுத்திட்டு, மைசூரில் நடைபெற்ற மாநாட்டுக்கு கொண்டு சென்றோம்.

பின்னர், ஜெய்வாபாய் பள்ளிக் குழந்தைகளின் வேண்டுகோளுக் கிணங்க திருப்பூர் வந்த கலாம், மாணவிகளின் மழை நீர் சேகரிப்பு திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

2004-ல் கணினிக் கல்வியை சிறப்பாக அமல்படுத்தியமைக்காக ஜெய்வாபாய் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நான் கலாமிடம் பெற்றபோது, அருகிலிருந்த அப்போதைய மத் திய தகவல் தொழில்நுட்ப அமைச் சர் தயாநிதி மாறன், ஜெய்வாபாய் பள்ளி தமிழகத்தில் உள்ளது என்று கூறியபோது, "எனக்கு ஜெய்வாபாய் பள்ளி குறித்து நன்கு தெரியும்" என்று கூறி வியப்படையச் செய்தார் கலாம்.

2005-ல் 110 மாணவிகள், 13 ஆசிரியைகளுடன் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று கலாமை சந்தித்தோம். அவர் மாணவிகளுடன் உரையாடி னார். "வேலை தேடுபவர்களாக இருக்காமல், வேலை தருபவர் களாக மாறுங்கள்" என்று அறிவுறுத் தினார்.

2003-ல் பள்ளியில் ஆடிட்டோரி யம் இல்லாததால் கலாம் வர முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது 7,000-ம் மாணவிகள் அமரக்கூடிய பிரம்மாண்டமான கலையரங்கத்தை கட்டியுள்ளோம். 2005-ம் ஆண்டிலிருந்தே கலாம் பிறந்த நாளை மாணவர் தினமாக கொண்டாடி வருகிறோம். அவரது பிறந்த நாளை உலக மாணவர் தின மாக கொண்டாட வேண்டுமென் பதே எங்கள் அனைவரின் வேண்டுகோளாகும்.

-ஆ.ஈசுவரன்,

முன்னாள் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x