Published : 12 Oct 2019 09:02 AM
Last Updated : 12 Oct 2019 09:02 AM

திருப்பூர் மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் குளறுபடி: ஒரே பெயரில் உள்ள வீதிகளை இணைத்ததால் குழப்பம்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் ஒரே பெயரில் இருக்கும் வீதிகளை ஒன்றிணைத்து, ஒரே வார்டின் கீழ், வாக்காளர் பட்டியல் வெளியிட்டதற்கு அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக் கான புகைப்படத்துடன் கூடிய வாக் காளர் பட்டியலை அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். திருப்பூர் மாநக ராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சி கள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டதாகும். 10,29,380 ஆண்கள், 10,34,034 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 224 பேர் என 20,63,638 பேர் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், வீதிகள் மாறி வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி காங்கயம் சாலையில் உள்ள ஆர்விஇ லே-அவுட் பகுதி 45-வது வார்டாகும். பல்லடம் சாலையில் மற்றொரு ஆர்விஇ லே-அவுட் பகுதி என நினைத்து, காங்கயம் சாலையில் உள்ள ஆர்விஇ லே-அவுட்டை சேர்ந்த 953 வாக்காளர்களைச் சேர்த் துள்ளனர். தாராபுரம் சாலை தெற்கு போலீஸ் நிலையம் எதிரில் உள்ள 51-வது வார்டு டிஎம்சி காலனியில் உள்ள 434 வாக்காளர்களை பல்லடம் சாலையில் உள்ள டிஎம்சி காலனியான 52-வது வார்டுக்கு மாற்றி உள்ளனர். மேற்கண்ட பகுதியில் மட்டும் 1377 வாக்காளர்கள் பூகோள ரீதியாக மாற்றப்பட்டுள்ளனர். குளறுபடிகள் நீடித்தால் காங்கயம் சாலையில் இருந்து பல்லடம் சாலையில் உள்ள ஆர்விஇ லே-அவுட் பகுதிக்குவர மூன்றரை கி.மீ. தூரம் ஆகும். இவ்வளவு தூரம் பயணித்து, பொதுமக்கள் எப்படி வாக்களிக்க இயலும் என்றார்.

திருப்பூர் மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலர் குமரேசன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘திருப்பூர் ஆர்விஇ லே-அவுட் மற்றும் டிஎம்சி காலனி ஒரே பெயரில் இருப்பதால், வாக் காளர் பட்டியலில் மாறி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சி யினர் ஆட்சேபனை தெரிவித்துள்ள னர். வாக்காளர் பட்டியலில் பாகம், வார்டு எண்கள், எதுவும் தவறுதலாக மாறி இடம்பெற்றிருப்பின் அதனை நேர் செய்து சரியான வார்டில் இடம்பெறும் வகையில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே திருத்தங் கள் செய்து கொள்ளலாம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x