Published : 12 Oct 2019 07:41 AM
Last Updated : 12 Oct 2019 07:41 AM

மாமல்லபுரம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம், கடைகள் மூடல்

மாமல்லபுரம்

பிரதமர், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மாமல்லபுரம் நகரின் உள்ளே செல்வதற்கான 2 சாலைகளின் நுழைவு வாயில்களில், வாகனங் களை சோதனை செய்து உள் ளூர் நபர்களை ஆதார் அட்டை மூலம் உறுதி செய்த பின்னரே அனு மதித்தனர்.

கோவளம் பகுதிக்கு வந்த பிரதமர் மோடியை கிராம எல்லை யில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் நாதஸ்வர கச்சேரி உட்பட பல் வேறு கிராமிய கலைஞர்கள் நடன மாடியும் இசைத்தும் வரவேற்பு அளித்தனர். இரு தலைவர்களும் காரில் மாமல்லபுரம் வந்தபோது, ஈசிஆர் சாலையின் இருபுறங்களி லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் தேசியக் கொடி மற்றும் சீன நாட்டின் கொடியை அசைத்து வரவேற்றனர்.

மாமல்லபுரத்துக்கு தலைவர் களின் வருகையையொட்டி உள் ளூரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதில், செங்கல்பட்டு, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாமல்லபுரம் வரும் பேருந்துகள், நகர எல்லையில் நிறுத்தப்பட்டு, திரும்பி அனுப்பப்பட்டன.

மேலும், இருசக்கர வாகனங் களும் கடும் சோதனை செய்த பின்னரே நகருக்குள் அனுமதிக் கப்பட்டன. பாதுகாப்பு கெடுபிடி கள் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள வியாபாரிகள் நேற்று கடைகளை திறக்காததால், சாலை கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் மீனவர் கள் மீன்பிடிக்க செல்லாமல் வலைகள் மற்றும் படகுகளை சீரமைக்கும் பணிகளை மேற் கொண்டனர்.

இந்நிலையில், பூஞ்சேரி அருகே ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலை இணையும் பகுதியில் போலீஸார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து மாமல்ல புரம் நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி விசாரணை மேற்கொண்ட னர். இந்தக் காரில் இருந்த 4 இளைஞர்கள் சீனாவைச் சேர்ந்த வர்கள் எனத் தெரிந்தது. மேலும், மூவரிடம் மட்டுமே பாஸ் போர்ட் ஆவணம் இருந்தது. மற்றொரு நபரிடம் பாஸ்போர்ட் இல்லை. அதனால், 4 இளைஞர்களி டமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x