Published : 11 Oct 2019 09:26 AM
Last Updated : 11 Oct 2019 09:26 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி (ஞாயிறு) வருகிறது. அதற்கு முன்னதாக சனிக்கிழமை விடு முறை என்பதால், இந்த பண்டி கையை கொண்டாட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக் கள் சொந்த ஊருக்கு செல்வார் கள். விரைவு ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் களை முன்பதிவு செய்துக் கொள் ளும் வசதி உள்ளது. இதனால், வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கையும் சராசரியாக 200-ஐ தாண்டியுள்ளது. தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, வரும் தீபாவளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளியையொட்டி திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகர்கோவில், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. இதில், கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தெற்கு ரயில்வே இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x