Published : 06 Oct 2019 12:45 PM
Last Updated : 06 Oct 2019 12:45 PM

திருட்டை தடுக்க குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் நவீன அலாரம்: மதுரையைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்

என்.சன்னாசி

மதுரை 

வங்கி, வீடு, வர்த்தக நிறுவனங் களில் திருட்டு, கொள்ளையைத் தடுக்க, குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கும் நவீன கருவியை மதுரையைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் குற்றவாளி களைப் பிடிக்க காவல்துறையினர் தற்போது கண்காணிப்பு கேம ராக்களை பயன்படுத்துகின்றனர்.

பூட்டிய வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண் காணிக்க போலீஸ் தயாராக இருந் தும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கெ னவே வங்கிகள், வர்த்தக நிறுவனங் களில் திருட்டு, கொள்ளையைத் தடுக்க எச்சரிக்கை செய்யும் அலாரங்கள் பொருத்தப்பட் டுள்ளன. இதன் மூலம் பெரிய கொள் ளைகள்கூட தடுக்கப்பட்டுள்ளன.இருப்பினும், காவல் துறை யினர் பெரிதும் நம்புவது சிசிடிவி கேமராக்களையே. இந்நிலையில், மதுரை டிவிஎஸ். நகரைச் சேர்ந்த இளைஞர் பாண்டி (30) என்ற திருட்டு தடுப்பு முன்னெச்சரிக்கை அலாரத்தை தயாரித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறியதாவது:

2000-மாவது ஆண்டில் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல்-எலெக்ட்ரானிக்ஸ் படித்த நான், வெளிநாட்டில் சில ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பினேன். அன்றாடம் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். சிசிடிவி போன்ற தொழில் நுட்பங்கள் இருந்தும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் குறையவில்லையே என சிந்தித் தேன். இதன் விளைவாக திருட்டு தடுப்பு முன்னெச்சரிக்கை கரு வியை ( ஏடிஏஎஸ்- ஆன்டி தெப்ட் அலாரம் சிஸ்டம் ) கண்டுபிடித் துள்ளேன். சுமார் ஒரு அடி நீளமுள்ள இக்கருவியில் சிவப்பு விளக்கு, ஒலி எழுப்பும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயலின்போது, பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும். காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு குறுந்தகவலுடன் மின் விளக்குகளை எரியச் செய்து அலாரம் அடிக்கும்.

கொள்ளையர்கள் சம்பவம் நடக்கும் பகுதிக்குள் எந்த திசையில் நுழைந்தாலும் எச் சரிக்கும். செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்எம் எஸ்) செல்லும் வகையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. திருடர் உள்ளே நுழைந்தவுடன் அலாரம் அடிப்பதுடன் பிற மின் விளக்குகளை யும் எரியச் செய்யும். கருவிக்கான இணைப்பைப் பெற்றவர்களே அக் கருவியை ‘டிஆக்டிவேட்’ செய்ய முடியும்.

வங்கி, வர்த்தக நிறுவனங்களில் இது போன்ற கருவிகளை பொருத்தினால் நள்ளிரவில் குற்றச் செயல்களை காவல் நிலையம் மூலம் தடுக்கலாம். இக்கருவியை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளேன். காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டுமெனில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக மதுரை காவல் ஆணையரிடம் சோதனை முறையில் செய்து காட்டினேன். அனுமதி கிடைத்த பிறகு வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கொண்டு வருவேன், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x