Published : 06 Oct 2019 10:25 AM
Last Updated : 06 Oct 2019 10:25 AM

சென்னை, கோவை, தூத்துக்குடியில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.5.50 லட்சம் பறிமுதல்

சென்னை, கோவை, தூத்துக்குடி யில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கே.கே.நகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமாரின் வீட்டில் நேற்று அதிகாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதேபோல் கோவை மாவட்டம் துடியலூர் வடக்கு வட் டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் கடந்த 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை வரை நீடித்த இந்த சோதனைகளில், 3 அரசு அலுவலகங்களில் இருந் தும் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்தனர்.

கே.கே.நகர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ரூ.44 ஆயிரத்து 710-ம், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 380-ம், துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2 லட்சத்து 715-ம், மேலும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தெரிவித் துள்ளனர்.

இதேபோன்று கடந்த 3-ம் தேதி சென்னை வடக்கு இணை போக்கு வரத்து ஆணையர் அலுவலகம், சென்னை புரசைவாக்கம் சார் பதிவாளர் அலுவலகம், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் தீய ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகம், கரூர் வட்டார போக் குவரத்து அலுவலகம் ஆகிய இடங் களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்து 290-ஐ பறிமுதல் செய்தனர்.

பண்டிகை நாட்களையொட்டி இடைத்தரகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் லாபம் அடைந்த நபர்கள், அரசு அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதாக வந்த தகவலை தொடர்ந்து அரசு அலுவலகங் களில் தொடர்ந்து சோதனை நடத் தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x