குக்கரில் சமைத்த சாதத்தை உடல் பருமன், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது: ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் விளக்கம்

குக்கரில் சமைத்த சாதத்தை உடல் பருமன், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது: ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் விளக்கம்
Updated on
1 min read

குக்கரில் சமைத்த சாதத்தை உடல் பருமன், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது என்று சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஊட்டச் சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று முன்தினம் ‘இந்தியா வில் 100 பேரில் 11 பேர் பாதிப்பு - குக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய் களை தடுக்கலாம் - ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர் கே.கண்ணன் அறிவுரை’ என்ற தலைப்பில் செய்தி வெளியா னது. குக்கரில் சமைத்த சாதத்தை சில உடல் பிரச் சினை உள்ளவர்கள் தவிர்த் தால் நல்லது என்று வெளியாவதற்கு பதிலாக, குக்கரில் சமைத்து சாப்பிடு வதே தவறு என்ற தொனியில் அந்தச் செய்தி வெளியாகி விட்டதாக தற்போது தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் நடந்த உலக இதய தின நிகழ்ச்சியில், டாக்டர் கே.கண் ணன் கூறவில்லை.

சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் கூறியிருந்தார்.

சாப்பிடுவதில் தவறில்லை

இதுகுறித்து மேலும் தெளிவுபடுத்தும் விதமாக அவர் கூறியதாவது:

குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகள், கீரைகளை வேகவைத்து சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.

அதேசமயம், உடல் பருமன் பிரச்சினை இருப் பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக அளவில் மாவுச்சத்து எடுத்துக் கொண் டால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். அது இதயத்துக்கு நல்ல தல்ல.

அதனால், இந்த பிரச்சினை உள்ளவர்கள் குக்கரில் சாதம் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவர்கள், அரிசியைப் பொங்க வைத்து கஞ்சியை வடித்துவிட்டு உண்ணும்போது மாவுச் சத்து சேராது. மாறாக, குழந் தைகளுக்கு அரிசி மூலம் கிடைக்கும் மாவு சத்து நன்மை பயக்கக் கூடியதே என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in