Published : 29 Sep 2019 07:58 AM
Last Updated : 29 Sep 2019 07:58 AM

நன்கொடையாகப் பெற்றது ரூ.61.82 கோடி; மக்களவை தேர்தலில் அதிமுக செலவு ரூ.19.95 கோடி: ரூ.232 கோடி இருப்பு உள்ளதாக ஆணையத்தில் தகவல்

சென்னை

கடந்த மக்களவைத் தேர்தலின் போது நன்கொடையாக ரூ.61 கோடியே 82 லட்சம் பெற்றதாக வும், ரூ.19 கோடியே 95 லட்சம் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்ட தாகவும், ரூ.232 கோடி இருப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தில் அதிமுக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. தேர்தல் முடிந்த நிலையில், தேசிய, மாநிலக் கட்சிகள் தங்கள் செலவுக் கணக்கு களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகின்றன. சமீபத் தில் திமுக சமர்ப்பித்த தேர்தல் செலவுக் கணக்கில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தலின்போது அளித்த தொகை யைக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலை யில், அதிமுக தனது செலவுக் கணக்கை சமர்ப்பித்துள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு தொகை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

கட்சி நிதி மற்றும் செல வைப் பொறுத்தவரை, கட்சியில் கையிருப்பு தொகையான ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 919 மற்றும் வங்கிகளில் இருக்கும் தொகை யுடன் சேர்த்து ரூ.192 கோடியே 58 லட்சத்து 2 ஆயிரத்து 276 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து முடியும் வரை, ரொக்க மாக ரூ.1 கோடியே 19 லட்சத்து 31 ஆயிரத்து 835-ம், காசோலை மற்றும் வரைவோலை மூலம் ரூ.60 கோடியே 62 லட்சத்து 86 ஆயிரத்து 276-ம் நன்கொடையாக பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர் களுக்கான போக்குவரத்து உள்ளிட் டவற்றுக்கு ரூ.72 லட்சத்து 43 ஆயிரம் செலவழிக்கப்பட்டுள்ளது. இதர தலைவர்களுக்காக ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்து 128 செல வழிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்வர் பழனிசாமிக்கு விமானம், சுற்றுப்பயண செலவாக ரூ.4 லட் சத்து 99 ஆயிரத்து 396-ம், துணை முதல்வருக்கு ரூ.87 ஆயிரத்து 732-ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள் என 34 பேருக்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவாக ரூ.1 லட்சத்து 94 ஆயிரமும், உணவு, டீசலுக்கு ரூ.31 ஆயிரத்து 226-ம், நொறுக் குத்தீனி செலவாக ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 90-ம் செலவழிக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மொத்த மாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி, கேபிள் டிவி, இணையதளம் ஆகிய வற்றில் விளம்பரத்துக்காக ரூ.19 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 620 செலவழிக்கப்பட்டுள்ளது. போஸ்டர்கள், பேனர்கள், ஸ்டிக்கர்கள், வரவேற்பு வளைவு கள் அமைத்தல், கட்அவுட், கொடி உள்ளிட்டவற்றுக்காக ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 867-ம், பொதுவான கட்சி கொள்கைப் பரப்பு விஷயத் துக்காக ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 126 என, ரூ.19 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 741-ஐ தேர்தலுக்காக அதிமுக செலவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த கையி ருப்பு, நன்கொடையாக வந்தது மற் றும் தேர்தல் செலவினம் போக இறு தியாக தற்போது ரூ.232 கோடியே 20 லட்சத்து 4 ஆயிரத்து 543, வங்கி யில் கட்சி பெயரில் இருப்பு உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x