Published : 28 Jul 2015 09:48 PM
Last Updated : 28 Jul 2015 09:48 PM

தங்கம் விலை குறைவு: ஒரு பவுன் ரூ.18,880-க்கு விற்பனை

தமிழகத்தில் 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 144 குறைந்து, ரூ.18 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

இன்று காலை நேர சந்தையின் போது 22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 15 குறைந்து ரூ. 2 ஆயிரத்து 363 ஆகவும், ஒரு பவுன் ரூ.120 குறைந்து ரூ.18 ஆயிரத்து 904 ஆகவும் விற்பனையானது. அதேபோல் 24 கேரட் கொண்ட சுத்த தங்கம் (10 கிராம்) ரூ.160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 270-க்கு விற்பனையானது.

மாலை நேர சந்தையின் போது 22 கேரட் கொண்ட ஆபரணத் தங்கம் ஒரு கிராம் மேலும் ரூ. 3 குறைந்து ரூ. 2 ஆயிரத்து 360 ஆகவும், ஒரு பவுன் ரூ. 24 குறைந்து ரூ. 18,880 ஆகவும் விற்பனையானது. அதேபோல் 24 கேரட் கொண்ட சுத்த தங்கம் (10 கிராம்) மேலும் ரூ. 11 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 259-க்கு விற்பனையானது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x