Published : 25 Sep 2019 10:14 AM
Last Updated : 25 Sep 2019 10:14 AM

அதிக இடங்களை பிடித்த மாணவிகள்: ஆயுஷ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; கலந்தாய்வு நாளை தொடக்கம்

கோப்புப் படம்

சென்னை

சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும் பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60), பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை திருமங்கலத்தில் உள்ள ஓமியோ பதி மருத்துவக் கல்லூரி (50) மற்றும் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என 5 அரசு கல்லூரிகளில் மொத் தம் 330 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 600 இடங் கள் இருக்கின்றன.

இந்நிலையில் இந்த இடங் களுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இந்த படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,600 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 600 பேரும் விண்ணப் பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி யான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல்களை ww.tnhealth.org, www.tnmedical selection.net ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,423 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 555 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக் கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 449 மதிப்பெண் பெற்ற எஸ்.இந்துமதி முதலிடத்தையும் அதே மதிப்பெண் பெற்ற எஸ்.சண்முகசுந்தரி இரண்டா வது இடத்தையும் 447 மதிப் பெண்களுடன் எஸ்.ஷீபா மூன்றா வது இடத்தையும் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 9 மாணவிகளும் ஒரு மாணவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் பின்னர் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x