Published : 21 Sep 2019 07:34 am

Updated : 21 Sep 2019 07:34 am

 

Published : 21 Sep 2019 07:34 AM
Last Updated : 21 Sep 2019 07:34 AM

ஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு; சந்திரயான் பயணத்தால் சாமானியனுக்கு என்ன பலன்?- விண்வெளி திட்டங்கள் பற்றி விஞ்ஞானிகள் விளக்கம்

what-is-the-use-of-chandrayan

சி.பிரதாப்

சென்னை


சந்திரயான் உள்ளிட்ட விண்வெளி திட்டங் களால் சாமானியனுக்கு கிடைக்கும் பலன் கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் வெற்றிகர மாக இயங்கி வரும் நிலையில், லேண்ட ரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதை மீட்டெடுக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற் சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் ரூ.978 கோடி செலவழித்து விண்கலங்களை அனுப்புவதைவிட பிற தேவைகளுக்கு அந்த நிதியை செலவிட லாம். கிரகங்களை ஆய்வு செய்வதன் மூலம் சமூக பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பன போன்ற கருத் துகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் சந்திரயான் உள்ளிட்ட விண்வெளி திட்டங் களால் சாமானியனுக்கு கிடைக்கும் பலன் கள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணுப்பிள்ளை கூறியதாவது: அறிவியலில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. எல்லாமே சோதனை முயற்சிகள்தான். நிலவில் அதிக ஆற்றல்வாய்ந்த ஹீலியம்-3 உட்பட பல்வேறு தாதுப்பொருட்கள் உள்ளன. இதில் ‘ஹீலியம் 3’ யுரேனியத்தைவிட 100 மடங்கு சக்தி கொண்டது. கதிர் வீச்சு பாதிப்பற்றது. இதனால் அதை மின் சக்தியாக மாற்றுவது எளிது. எனவே, நிலவில் இருந்து ‘ஹீலியம் 3’ பூமிக்கு எடுத்து வருவதற்கான சாத்தியக் கூறு களை ஆய்வு செய்ய விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன.

எதிர்காலத்தில் நிலவு ஒரு இடை நிறுத்தப்பகுதியாக மாற்றப்பட்டு செவ் வாய் உட்பட பிற கிரகங்களுக்கு சென்று வர உதவக்கூடும். விண்வெளியை சார்ந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு, அதிவேக தகவல் பரிமாற்றங் களுக்கும் புயல் போன்ற பேரிடர் நிகழ்வு கள், விவசாயம், நதிநீர் இணைப்பு உள் ளிட்ட பெரும்பாலான தேவைகளுக்கும் செயற்கைக்கோள்களின் உதவி தேவைப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது: பூமியில் மிக அரிதாக கிடைக்கக்கூடிய எட்ரீயம் (Yttrium), நியோடைமியம் (Neodymium) உள்ளிட்ட தாதுப்பொருட்கள் நிலவில் அதிகம் உள் ளன. இவை நிலவின் மேற்பரப்பிலேயே காணப்படுவதால் பூமிக்கு எளிதாக எடுத் துவர முடியும். தற்போது நிலா ஆண்டு தோறும் சராசரியாக 3 செமீ அளவுக்கு பூமியை விட்டுவிலகிச் செல்கிறது. இதனால் பூமியின் சுழல் வேகம் குறைந்து வருகிறது. இந்நிலை நீடித்தால் பூமியின் ஒருநாள் காலஅளவு 24 மணி நேரத்தில் இருந்து அதிகரிக்கும் அபாயமுள்ளது.

இதற்கான மாற்றுவழிகளை ஆராய சந்திரயான்-2 விண்கலத்தில் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை அளவிடும் கருவி அனுப்பப்பட்டது. இது தவிர சந்திரயான் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, டெரைன் ரிலேட்டிவ் நாவி கேஷன் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட் பங்களை மற்ற நாடுகள் உதவியின்றி இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இத்தகைய தொழில்நுட்பங்களை இந்திய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங் கள்தான் தயாரித்தன. இதன்மூலம் உயர்தொழில்நுட்பங்கள் பற்றிய ஆய்வு களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு தரப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் திட்டமிட்ட தைவிட 15 சதவீதம் கூடுதல் செயல் பாட்டை வழங்கியுள்ளது. எனவே, இந்த ஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவதை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும் போது, ‘‘இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும் முதலீடுகளும் மக்களின் நன்மையை முன்னிறுத்தியே இருக்கும். பூமியில் எரி பொருள், தண்ணீர், கனிம வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு மாற்றாக மற்ற கிரகங்களில் உள்ள வளங்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சந்திரயான் உள்ளிட்ட எல்லா திட்டங் களும் எதிர்கால தேவைகளுடன் தொடர் புடைவை. சந்திரயானின் 95 சதவீத வெற்றி யின் மூலம் இளைஞர்கள், மாணவர் களிடம் விண்வெளி அறிவியல் தொடர்பான பெரும் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளைவிட குறைந்த அள விலான நிதியைத்தான் இஸ்ரோ முதலீடு செய்கிறது. நாசாவின் பட்ஜெட் தொகையை விட 20 மடங்கு குறைவாகவே செலவு செய்துள்ளோம். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சூரியன், வெள்ளி கிரகங்களை ஆய்வு செய்வதற் கான விண்கலங்களை அனுப்பும் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் விரைவில் சந்திரயான்-3 திட்டப்பணிகளும் தொடங்கும்’’என்றனர்.

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைசந்திரயான்விஞ்ஞானிகள் விளக்கம்விண்வெளி திட்டங்கள்சந்திரயான் -2ஆர்பிட்டர்இஸ்ரோஏ.சிவதாணுப்பிள்ளைஹீலியம் 3YttriumNeodymium

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author