Published : 19 Sep 2019 09:08 AM
Last Updated : 19 Sep 2019 09:08 AM

பல்வேறு கட்டுப்பாட்டு அம்சங்களுடன் ‘தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்’அமல்: தனி இயக்குநரகத்தின்கீழ் கொண்டுவரத் திட்டம்

கோப்புப்படம்

சென்னை

தனியார் பள்ளிகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தின் பெயரை தனியார் பள்ளிகள் இயக்குநரகமாக மாற்றி அதன்கீழ் அனைத்து தனியார் பள்ளிகளையும் கொண்டு வர இருப் பதாக தகவல்கள் வெளியாகின.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி ஒரேவிதமான விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதற்காக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம்’ 2018 ஜூலை 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய் யப்பட்டு ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. எனினும், புதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டம் இயற்றப் பட்டு தற்போது ஓராண்டு முடிந்து விட்ட நிலையில், தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அதை அரசிதழில் வெளியிட் டுள்ளது. மேலும், அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதலே சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, சரியாக படிக்காத மாணவர்களை தனியார் பள்ளிகள் இனி பொதுத் தேர்வுகள் எழுதவிடாமல் தடுக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் தரப்பட் டுள்ளது. மாணவர்களுக்கு மனரீதி யாகவோ அல்லது உடல்ரீதி யாகவோ தொல்லை தரக்கூடாது.

பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளி நிர்வாகம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பள்ளி களில் மாணவர்கள் அறிவுத் திறனை மேம்படுத்தும் பாடத் திட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத் தவும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் தனியார் பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்.

தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணிகளுக்காக தனியார் பள்ளி ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்ப வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உட்பட வேலைகளில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர் களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணம் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது. கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கையை தொடங்கும் முன்பாக குறைந்த பட்சம் 30 நாட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறி விப்பை பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

அரசுப் பள்ளிகளை போல தனியார் பள்ளிகளிலும் பெற்றோர், ஆசிரியர் சங்கம் அமைப்பது அவ சியம். அரசு ஒப்புதல் பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது. தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக்குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளலாம்.

அவ்வாறு நியமனம் செய்யப் படும் பணியாளருடன் பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x