Published : 18 Sep 2019 11:35 AM
Last Updated : 18 Sep 2019 11:35 AM

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் சிறந்த 500 பல்கலை. பட்டியலில் விஐடி இடம்பெறும்: பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் நம்பிக்கை 

சென்னை

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங் கள் பட்டியலில் விஐடி பல் கலைக்கழகமும் இடம் பெறும் என்று அப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக தனியார் கல்வி நிறுவ னங்களில் வேலூர் விஐடி பல் கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா சென் னையில் நேற்று நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது:

மத்திய அரசின் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து கிடைத் துள்ளது மகிழ்ச்சி. இதையடுத்து உலகத் தரத்துக்கு விஐடி பல் கலைக்கழகம் மேம்படுத்தப்படும். குறிப்பாக அடுத்த 3 ஆண்டு களில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் விஐடி இடம்பெற முயற்சிகளை மேற்கொள்வோம்.

மேலும், கல்வி, ஆராய்ச்சிப் பணி களை மேம்படுத்த 68 நாடுகளில் உள்ள 600 பல்கலைக்கழகங்களு டன் இணைந்து செயல்பட இருக் கிறோம். விஐடி பல்கலை.யில் இனி புதிய கண்டுபிடிப்புகள் தொடர் பான ஆய்வுகளுக்கு முக்கியத் துவம் வழங்கப்படும். இதற்காக ஐஐடி.களில் தரப்படுவதுபோல ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர் களுக்கு உதவித்தொகை அளிக் கப்பட உள்ளது.

தற்போது உலக அளவில் பாடப்பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் விஐடியின் கணினி தொழில்நுட்பம், வேதியியல், மின் மற்றும் மின்னணுவியல் ஆகிய 3 பாடங்கள் முதல் 550 இடங் களுக்குள் இடம்பெற்றுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசையில் தனியார் கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் விஐடி முதலிடத்தில் உள்ளது.

தொழில்நுட்ப பூங்கா, உயர்கல்வி வசதிகள் பயிற்சி நிறுவனம், இணையதள கற்றல் மையம், உலக திறன் மேம்பாட்டு மையம் உட்பட்டவை விஐடி பல்கலை.யின் எதிர்காலத் திட்டங் களாகும்.

சிறப்பு அந்தஸ்து பெற்றுவிட்ட தால் கல்விக் கட்டணம் உயராது. ஏனெனில், எங்கள் பல்கலை.யில் நடுத்தர மக்கள்தான் அதிகம் படிக் கின்றனர். அவர்களை மனதில் வைத்துத்தான் கட்டணம் நிர்ண யிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் ஆனந்த் சாமுவேல், விஐடி (சென்னை) இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், விஐடி (வேலூர்) இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x