Published : 18 Sep 2019 10:18 AM
Last Updated : 18 Sep 2019 10:18 AM

தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அப்போலோவில் ‘புரோஹெல்த்’ திட்டம் தொடக்கம்

ஆரோக்கியமாக வாழ்வதற்கான ‘புரோஹெல்த்’ என்ற விரிவான உடல் நல சுகாதார மேலாண்மை திட்டத்தை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை

சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான ‘புரோஹெல்த்’ என்ற சுகாதார மேலாண்மை திட்டத்தை அப் போலோ மருத்துவமனை தொடங்கி யுள்ளது.

தொற்றாத நோய்களான பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய், உடல் பருமன், தூக்க மின்மை போன்ற நோய்களை ஆரம்பத்தில் இருந்தே கண்கா ணித்து சிகிச்சை அளிக்கவும், தொழில்நுட்ப உதவியுடன் மருத் துவப் பரிசோதனைகள் மேற்கொள் ளவும், ஆரோக்கிய வாழ்வுக்கான ‘புரோஹெல்த்’ என்ற விரிவான உடல்நல சுகாதார மேலாண்மை திட்டத்தை அப்போலோ மருத்து வமனை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

நோய் வந்தால் எவ்வாறு குணப்படுத்துவது என்றுதான் பலரும் சிந்திக்கிறோம். நோய்களே வராமல் ஆரோக்கியத்தைப் பேணு வது எப்படி என்று யோசிப்பது இல்லை. அதுதொடர்பான விழிப்பு ணர்வு, மருத்துவ வசதிகள் அதிக ரித்தாலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்கின் றனர். இளம் வயதினர், பதின் பருவத்தினரும் இப்பரிசோதனை களை மேற்கொள்வது அவசியம்.

தொற்றாத நோய்கள் சுனாமி போல உலகத்தை அச்சுறுத்து கின்றன. முக்கியமாக புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவை மக்களை அதிகம் பாதிக்கின்றன.

இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி, புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதுதான் புரோஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கம். இது மிகவும் பயன்தரக் கூடிய உடல்நல சுகாதார மேலாண்மை திட்டமாகும்.

எந்தெந்த பரிசோதனைகள் மேற் கொள்வது, என்ன உணவுகள் உட் கொள்வது, என்னென்ன வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிப் பது என்பன போன்ற விவரங் களைப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள், இத்திட் டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி பேசும் போது, ‘‘அப்போலோ மருத்துவ மனையின் இந்த புரோஹெல்த் திட்டம் தொற்றா நோய்களை குணப்படுத்தி மக்களின் வாழ்க்கை யில் நல்ல, உறுதியான மாற்றங் களை நிகழ்த்தும்” என்றார்.

விழாவில் அப்போலோ மருத்துவமனைகள் குழும நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, தடுப்பு மருந்துகள் இயக்குநர் உதயா, இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x