Published : 16 Sep 2019 09:34 AM
Last Updated : 16 Sep 2019 09:34 AM

இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்துக்கும் தயார்: திருவண்ணாமலை முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

திருவண்ணாமலை

இந்தியை திணிப்புக்கான எந்த முயற்சியையும் தடுக்க, எந்த தியா கத்துக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று திருவண்ணா மலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருவண்ணா மலையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். இதில், ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

முப்பெரும் விழாவில் பேனர்கள் அமைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரக்கூடிய விழாக்களில், இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிடுகிறேன்.

இப்போது, அமைச்சர்களுக் காக ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் தமிழகத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்களை விட்டுவிட்டு முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

முதல்வர் வெளிநாடு சென்றதை விமர்சிக்கவில்லை. நாடகம் நடத்திக் கொண்டு இருக் கின்றனர். ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு நிறுவனத்தின் பெயரைகூட வெளியிடவில்லை. வெளிநாடுகளில் முதல்வர் பார்வை யிட்ட இடங்களை மட்டுமே தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தபால் துறை, ரயில்வே துறையில் தமிழை அழிக்கக்கூடிய முயற்சி ஒரு பக்கம் நடக்கிறது. கலாச்சார படை யெடுப்பை தடுக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உண்டு.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் வாழவில்லை. 1,652 மொழிகளை பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். நாடு முழுவதும் ஒரு மொழி என்று இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது, இந்தியா முழுமைக்கும் இந்தியை திணிக்கத்தான்.

இன்றைக்கு இந்தியை திணிக்க சட்டம் போடுவார்கள், நாளைக்கு தமிழை படிக்கக்கூடாது என்று சட்டம் போடுவார்கள். இது கலாச் சார படையெடுப்பு என்று பெரியார் சொன்னார். இந்தி பேசுபவர்களின் நாகரீகம் வேறு, நம்முடைய நாகரீகம் வேறு என்றார். கலாச்சார படையெடுப்பை தடுக்க திமுக தயாராக இருக்க வேண்டும்.

இந்தி திணிப்பை வேடிக்கை பார்க்க மாட்டோம். அதை தடுக்கும் முயற்சியில் உறுதியாக ஈடுபடு வோம். அதற்காக எந்த தியாகத் துக்கும் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x