Published : 15 Sep 2019 11:08 am

Updated : 15 Sep 2019 11:08 am

 

Published : 15 Sep 2019 11:08 AM
Last Updated : 15 Sep 2019 11:08 AM

ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து

sathguru-speech-about-hindi-imposition
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், காவிரி ஆறு பாதுகாப்புக் காக இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். திருவாரூ ரில் நேற்று அவர் நடத்திய விவசாய சங்கத் தலைவர்களுடனான கலந்துரை யாடலின்போது பேசுகிறார் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்.

திருவாரூர்/தஞ்சாவூர்

ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.


'காவிரி கூக்குரல்' என்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற் கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், நேற்று திருவாரூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக திருவாரூர் வந்தடைந்த அவரது குழுவினருக்கு பல்வேறு இடங் களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விவ சாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு ஜக்கி வாசுதேவ், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

‘காவிரி கூக்குரல்' நிகழ்ச்சி விவசாயிகளிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவாகத்தான் ஏராள மான விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர்களும் கலந் துரையாடலில் பங்கேற்று நல்ல கருத்துகளைப் பதிவு செய்துள்ள னர். காவிரியைப் பாதுகாக்கும் இந்த விஷயத்தில் விவசாயிகளின் பேராதரவு உள்ளது.

மொழிகளை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் மாநி லங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது அனைத்து மொழிகளுக்கும் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது. இந்தியாவில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை. வருங்கால தலைமுறையினர் 4 மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக நடைபெற்ற விவ சாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலை வர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டி யன் உட்பட பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

350 நாற்றுப் பண்ணைகள்

முன்னதாக, தஞ்சாவூர் அருகே சூரியம்பட்டியில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணையில் நேற்று மரக்கன்றுகளை நடவு செய்த சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தினர் தமிழகத்தில் 40 நாற்றுப் பண்ணைகளில் ஆய்வு செய்தபின், ஈஷா நாற்றுப் பண்ணை யில் வளரும் மரக் கன்றுகளுக்கு மட்டும்தான் வேரில் வேர்ப்புழு பாதிப்பு இல்லை என்பதை கண்டறிந் துள்ளனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு அனைத்து ஈஷா நாற்றுப் பண்ணை களுக்கும் ‘மகாத்மா இந்தியா கிரீன் மிஷன்' எனப் பெயரிட உள்ளோம். கிராமங்களில் வாழ் பவர்கள் வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பது காந்தி யின் கனவு. அவரது கனவை நன வாக்குவதென உறுதி ஏற்றுள் ளோம்.

இப்போது நம்மிடம் 35 நாற்றுப் பண்னைகள் உள்ளன. ஓரிரு ஆண்டுகளில் காவிரி வடி நிலப் பகுதிகளில் 350 நாற்றுப் பண்ணைகளை அமைக்க உள் ளோம்.

மேலும், 10 ஆயிரம் விவசாயி களுக்கு நாற்றுப் பண்ணை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம். இது அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும். நம் தமிழ் மண்ணை நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைஒரே நாடு ஒரே மொழிஇந்தி திணிப்புஈஷா அறக்கட்டளைசத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்துசத்குரு பேச்சு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author