Published : 14 Sep 2019 10:22 AM
Last Updated : 14 Sep 2019 10:22 AM

கூடுதல் வேலைப் பளுவால் மருத்துவ மாணவர்களுக்கு நெருக்கடி- அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவர் பற்றாக்குறையை ஈடுகட்ட பட்ட மேற்படிப்பு படிக்கும் முது நிலை மாணவர்களை பணிகளில் ஈடுபடுத்துவதால், அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 24 அரசு மருத் துவக் கல்லூரிகள் உள்ளன. இக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், எம்எஸ், எம்டி, டிப்ளமோ பட்ட மேற்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதுபோல, செவிலியர் பயிற்சிக் கல்லூரியும் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து செயல்படுகிறது.

இங்கு படிக்கும் மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல் வியுடன் மருத்துவமனை பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக எம்எஸ் மற்றும் எம்டி படிக்கும் மாணவர்கள் மருத் துவக் கல்லூரியில் அறுவைச் சிகிச்சை தவிர மற்ற பணிகளில் ஈடு படுத்தப்படுகின்றனர்.

வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகளில் முதுநிலை மருத்துவ மாணவர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் கின்றனர். அதுபோல, உள் நோயாளிகள் பிரிவிலும் 24 மணி நேர ஷிப்ட் முறையில் பட்ட மேற்படிப்பு மாணவர்களே பணிபுரிகின்றனர். மருத்துவர் பற்றாக்குறையால் ஒட்டு மொத்த மருத்துவப் பணியும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தலையில் சுமத்தப்படுகிறது.

சில மாணவர்கள் கூடுதல் வேலைப் பளுவால் மன நெருக்கடிக்கு ஆளாகி தொடர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்படியான சூழலில்தான், மது ரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மயக்கவியல் துறை மாணவர் உதயராஜ் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவப் பேராசி ரியர்கள் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவர்கள் மருத்துவக் கல்வி யுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளையும் செய்யும் சூழல் ஏற்படுகிறது. மருத்துவர் பற் றாக்குறையால்தான் இந்த நெருக் கடி ஏற்படுகிறது.

குழந்தைகள் சிகிச்சைத் துறை, மயக்கவில், மகப்பேறு துறைகளில் மற்ற துறைகளை காட்டிலும் வேலை அதிகமாக இருக்கும். அறுவை சிகிச்சை அரங்குகளில் மயக்கவியல் மருத்துவர் பணி முக்கியமானது.

உதவி மருத்துவப் பேராசிரியரின் கீழ் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், அறுவைச் சிகிச்சை அரங்குகளில் பணிபுரிகின்றனர். மருத்துவக் கல்வியைப் பயின்று கொண்டே மருத்துவப் பணியையும் சேர்த்து பார்க்கும்போது சில முது நிலை மாணவர்களுக்கு சோர்வு ஏற்படுவது வழக்கம்.

ஆனால், அரசு மருத்துவமனை பணி தங்கள் எதிர்கால பணிக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என் பதால் ஆர்வமாகவே பணிபுரிவர். பெரும்பாலும் முதுநிலைப் படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் 6 மாத ங்களுக்குப் பிறகு இந்தப் பணி நெருக் கடியான சூழலுக்கு பழகி விடுவர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 30 அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன. மயக்கவியல் துறை மருத்துவர் பற்றாக்குறையால், இந்த அறுவைச் சிகிச்சை அரங்குகளில் பட்ட மேற்படிப்பு மயக்கவியல்துறை மாணவர்களுக்கு கூடுதல் பணி கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் தொடர்ந்து பணிபுரியும்போது, ஒரு கட்டத்தில் அவர்கள் மன உளை ச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.

மருத்துவக் கல்லூரிகளில் மருத் துவ மாணவர்கள் விகிதாச்சார அடிப் படையில்தான் , மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது. நோயாளிகளின் வருகை, அறுவைச் சிகிச்சைகள் நடக்கும் அடிப்படையில் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் மருத்துவ மாணவர்களுக்கான பணிப்பளு குறையும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x