Published : 14 Sep 2019 10:18 AM
Last Updated : 14 Sep 2019 10:18 AM

ராணுவத்தால் காஷ்மீரை நிர்வகிப்பது வெட்கத்தை தருகிறது: உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு வேதனை

புதுச்சேரி

சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் ‘ரோஜாக்களின் கண்ணீர் துடைக்க’ என்ற தலைப்பில் சமூக நல்லிணக்க வலியுறுத்தல் நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியது: ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியா? இல்லையா?' என்ற கேள் வியை விட, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டா? இல்லையா? என்ற கேள்வி நம் முன் எழுகிறது. சிலர் சொல்கின்றனர், 'சிறப்பு அந்தஸ்து இல்லை' என்று; அரசியலமைப்பு சட்டத்தில், 'சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. மரபுடைய தற்காலிகமான பகுதி' அது என்று. இப்படிப்பட்ட சட்ட நிபுணர்கள் விவாதிக்கக் கூடிய பிரச்சினையை உச்சநீதிமன்றம் விவாதிக்கப் போகிறது. தீர்ப்பளிக்க போகிறது. அதற்காக நாம் காத்திருப்போம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருக்கிறது. இங்குள்ள ஆளுநருக் கும், முதல்வருக்கும் 'யார் பெரி யவர்?' என்பதில் மோதல் இருந்து வருகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வரு கிறோம். இப்படி மாநில அந்தஸ்து கேட்கின்ற வேளையில், ஒரு மாநி லத்தையே யூனியன் பிரதேசமாக மாற்றுகின்றனர்.

அவர்களுக்கு மொழி, மக்கள், பகுதி, சமயம் முக்கியமல்ல. அவர் கள் அதிகார பங்கீடாகத்தான் பிர தேசங்களை பார்க்கின்றனர். யூனி யன் பிரேதசத்துக்கு என்று இங்கு சட்டப்பேரவை இருக்கிறது. ஆனால் யூனியன் பிரதேசம் என்று சொல்லக்கூடிய லடாக் மாநிலத் தில் சட்டப்பேரவை இல்லாத சூழலை உருவாக்கி விட்டனர். நாம் பின் னோக்கி சென்றதை இது காட்டுகி றது. 100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் யோசித்த யோசனை போன்று உள்ளது.

காஷ்மீரில் தலைவர்களை சிறை வைத்துள்ளனர். மக்கள் வெளியே வர முடியவில்லை. இன்றைக்கு அறிவியல் பாதையில் நாம் முன் னேறி டிவி, செல்போன், கம்ப்யூட்டர் வைத்துள்ளோம். ஆனால் அங்கு ஒரு இருண்ட காலத்துக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை நாம் கண்டிக்கவில்லை என்றால் நாம் இந்தியாவின் குடும் பம் என்று சொல்வதில் லாயக் கில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய இளை ஞர்கள் ஒரு கிரிக்கெட் போட்டியில் விதிகள் மாற்றப்பட்டுள்ளதா என் பது குறித்து சமூக வலைதளத்தில் விவாதிக்கின்றனர். ஆனால் இங்கு ஒரு நாட்டின் விதிகள் மாற் றப்பட்டுள்ளது. அது யூனியன் பகு தியாக மாற்றப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி சட்டப்பேரவையே இல் லாமல் மாற்றப்பட்டுள்ளது.

ராணுவத்தை வைத்து ஆட்சி செய்கின்றனர்.

காஷ்மீரில் உள்ளூர் போலீஸார் 65 ஆயிரம் பேர். ஆனால் ராணுவத் தினர் ஆறரை லட்சம் பேர். இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு ராணுவத்தின் எண்ணிக்கை 10 லட்சம் பேராக உயர்ந்திருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு உள்ளூர் போலீஸாருக்கும் ஒன்றரை ராணு வத்தினர் உள்ளனர். அப்படி ஒரு மாநிலம் இன்றைக்கு நிர்வகிக் கப்படுகிறது என்பது வெட்கத்தைத் தருகிறது. 52 நாடுகள் இதை கண் டித்துள்ளன. மனித உரிமையை நிலைநாட்டுங்கள், மக்களை நடக்க விடுங்கள் என்கின்றனர் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜாங்கம், மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி பாலசுப்பிரமணி யன், திராவிடர் கழகம் சிவ. வீரமணி, மனித நேய மக்கள் கட்சி பஷீர் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x