செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 08:49 am

Updated : : 11 Sep 2019 08:49 am

 

விவசாயத்துக்கு முன்னுரிமை தந்திருந்தால் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருக்காது: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கருத்து

economy-crisis
செ.நல்லசாமி

நாமக்கல்

விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்காது என தமிழ்நாடு கள் இயக்க ஒருங் கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளருமான செ.நல்லசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நாமக் கல்லில் கூறியதாவது:

காவிரி தீர்ப்பில் நாள்தோறும் நீர் பங்கீடு என்ற அம்சம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் மேட்டூர் உபரி நீர் பயன்பாடு இல்லாமல் கடலில் கலந்திருக்காது. இந்தியாவின் உள்நாட்டு நுகர்வுக்கு 2.6 கோடி டன் சர்க்கரை போதுமானதாகும். ஆனால், இந்தாண்டு 3.3 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி யாக உள்ள 60 லட்சம் டன் சர்க்க ரையை மானியத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரும்பிலிருந்து எத்தனால் தயாரிப்பை கூட்டியிருந்தால் சர்க் கரையை வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. கள் மீதான தடையை நீக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையும் வேண்டாம். விவசாயக் கமிஷன் பரிந்துரையை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிடுகிறது. முதல்வர், அமைச்சர்களின் வெளி நாட்டுப் பயணத்தில் அந்நாடுகளில் தடை செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகளை இங்கு வரக்கூடாது என்பதில் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். விவசாயத் துக்கு முன்னுரிமை கொடுத்திருந் தால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.

விவசாயத்துக்கு முன்னுரிமைஇந்திய பொருளாதாரம்பொருளாதார மந்தநிலைகள் இயக்க ஒருங்கிணைப்பாளர்தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு
Popular Articles

You May Like

More From This Category

More From this Author