Published : 10 Sep 2019 05:37 PM
Last Updated : 10 Sep 2019 05:37 PM

மன அழுத்தத்தைக் குறைக்க ஓய்வு நேரத்தில் பாட்டுப் பாடி அசத்தும் காவல் ஆய்வாளர்

கிருஷ்ணகிரி

மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓய்வு நேரத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போச்சம்பள்ளி அடுத்த பாரூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம். குறைந்த அளவு காவலர்களே பணிபுரிந்து வரும் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்து வருகிறது.

போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் கரைத்து வருகின்றனர். இதனைக் கண்காணிக்க பாரூர் காவலர்கள் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த மன அழுத்தத்தைப் போக்க பாரூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் தனது ஓய்வு நேரத்தில் பாடல் பாடி அசத்தி வருகிறார். இதனைப் படம் பிடித்த சக காவலர் இதனை வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். பாடல் பாடி அசத்தும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

ஓய்வு நேரத்தில் பாடல் பாடும் சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x