Published : 13 Jul 2015 10:41 AM
Last Updated : 13 Jul 2015 10:41 AM

செந்தூர் பாண்டியன் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சர்கள் அஞ்சலி

சென்னையில் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச் சருமான செந்தூர்பாண்டியன், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் சென்னையில் மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான செங்கோட்டைக்கு எடுத்து வரப்பட்டு சேர்வைகாரன் புதுத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் மு.கருணா கரன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, எடப் பாடி பழனிச்சாமி, காமராஜ், எஸ்.பி. சண்முகநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன் மற்றும் எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலாசத்தியானந்த், பிரபா கரன், வசந்திமுருகேசன், சசிகலா புஷ்பா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செந்தூர் பாண்டியனின் உடல் நேற்று காலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு மூத்த மகன் அய்யப்பராஜ் தீ மூட்டினார். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x