Published : 01 Sep 2019 08:05 AM
Last Updated : 01 Sep 2019 08:05 AM

6,491 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 இன்று நடக்கிறது: 17 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை

தமிழக அரசுத் துறைகளில் காலியாக வுள்ள விஏஒ உள்ளிட்ட 6,491 பணியிடங் களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு இன்று நடக்கிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

தமிழக அரசுத் துறைகளில் குரூப்-4 பணியிடங்களான கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உட்பட 6,491 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்டது. இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 14-ம் தேதி கடைசி நாளாகும். இதன்படி, இந்தத் தேர்வுக்கு மொத்தம் 17 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் ஆகஸ்ட் 22-ம் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு வெளியானது.

இதன் தொடர்ச்சியாக எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 301 தாலுகா மையங்களிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குரூப்-4 தேர்வை எழுதும் தேர்வர் களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. தேர்வறைக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வந்து விட வேண்டும். தேர்வறைக்குள் பால் பாய்ண்ட் பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். செல்போன், கால்குலேட் டர் உட்பட மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அதற்கு மாறாக தேர்வறை யில் மின்னணு சாதனங்கள் வைத் திருந்தால் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், அவர்கள் எழுதிய தேர்வும் ரத்து செய்யப்படும். அதேபோல் கலர் பென்சில், புத்தகங்கள், குறிப்புகள் உள்ளிட்ட பொருட்களையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து வரக்கூடாது. அவ்வாறு கொண்டு வரும் பொருள் களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் மற்ற தேர்வர்களைப் பார்த்து எழுதுதல், பார்த்து எழுத உதவி செய்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ் வாறு ஈடுபட்டால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பணியிடங்கள் தோராய மானதாகும். தேர்வு முறை முடியும் வரை இந்த எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டதாகும். காலிப்பணியிட எண்ணிக்கையில் 20 சதவீதம் தமிழ் வழி பயின்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இதற்கிடையே தேர்வு மற்றும் கண்காணிப்பு பணி களுக்கு தேவை யான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்வை நடத்தும் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்வெழுத செல்பவர் களுக் காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. முக்கியமாக இந்தத் தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி 397, இளநிலை உதவியாளர் 2,688, தட்டச்சர் 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் 784 ஆகிய பதவிகளுக்கே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x