Last Updated : 09 Jul, 2015 07:51 AM

 

Published : 09 Jul 2015 07:51 AM
Last Updated : 09 Jul 2015 07:51 AM

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: வருண பகவானுக்கு குடிநீர் வாரியம் பூஜை

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மழை வேண்டி வருண பகவா னுக்கு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பூஜை செய்துவருகின் றனர்.

சென்னையில் கடந்த 3 மாதங் களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகும் சென்னையில் வெயில் குறைய வில்லை. மழையும் அதிக அளவில் பெய்யவில்லை.

சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் குறைந்தபட்ச நீர் இருப்பே உள்ளது. இந்த நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ள ளவு 11.05 டிஎம்சி ஆகும். ஆனால் தற்போது 1.15 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத் தில் 2.36 டிஎம்சி நீர் இருந்தது.

தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு 2 மாதங்கள்கூட சமாளிப் பது கடினம் என்று கூறப்படுகிறது. 3.2 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 0.067 டிஎம்சி நீர் தான் உள்ளது. வீராணத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு பெறப்படும் 180 மில்லியன் லிட்டர், திருவள்ளூர் பகுதியில் விவசாய கிணறுகள் மூலம் கிடைக்கும் 70 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தினமும் கிடைக் கும் 200 மில்லியன் லிட்டர் ஆகிய வற்றை மட்டுமே குடிநீர் தேவைக்கு சென்னை மக்கள் நம்பி இருக்கின் றனர். தண்ணீரை குழாய்களில் செலுத்துவதற்கு போதிய அழுத் தம் இல்லாததால் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது அதிகரித்துள் ளது.

இந்நிலையில், குடிநீர் தட்டுப் பாட்டை சமாளிப்பதற்காக மழை வேண்டி வருண பகவானுக்கு பூஜைகள் செய்து வருகிறது சென்னை குடிநீர் வாரியம். எழும்பூர் தாசப்பிரகாஷ் அருகில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில் குடிநீர் வாரிய பகுதி பொறியாளர், துணை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், உதவி பொறியாளர்கள் கலந்துகொண் டனர்.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இப்போதுள்ள இருப்பைக் கொண்டு அதிகபட்சம் 2 மாதங்கள் சமாளிக்கலாம். ஆந்திராவிடம் கிருஷ்ணா நீரைக் கேட்டு நிற்பதைவிட கடவுளிடம் மழை வேண்டி யாகம் செய்யலாம் என்று முடிவு செய்தோம்’’ என்றார்.

பாரிமுனை தம்புசெட்டி தெரு வில் ஈஸ்வரர் கோயிலிலும் கடந்த வாரம் மழை வேண்டி குடிநீர் வாரிய அதிகாரிகள் பூஜை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x