Published : 24 Aug 2019 08:45 AM
Last Updated : 24 Aug 2019 08:45 AM

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘அம்மா ரோந்து வாகனம் ’- சென்னையில் 26-ம் தேதி அறிமுகம்

அம்மா ரோந்து வாகனம்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘அம்மா ரோந்து வாகனம்’ வரும் 26-ம் தேதி சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இவ்வகை குற்றங்களில் ஈடு படுபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தமிழகத்தில் அண்மையில் புதி தாக உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ஒருவர் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, கூடுதல் டிஜிபியாக ஐ.பி.எஸ். அதிகாரி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே இனி விசாரிக்க உள்ளது.

இந்த பிரிவுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரத்யேகமாக ‘பிங்க்’ நிற ரோந்து வாகனத்தை உரு வாக்கியுள்ளது. இதில் குழந்தைகளுக் கான உதவி எண் 1098, மற்றும் பெண் களுக்கான உதவி எண் 1091, வாக னத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த வாகனம் வரும் 26-ம் தேதி முதல் பயன் பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக 40 வாகனங்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு வாகனம் வீதம் வழங்கப்பட்டு மீதம் உள்ள 5 வாகனங்கள் அவசர தேவைக்காக நிறுத்தி வைக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் பிற மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த வாகனங்களுக்கு ‘அம்மா ரோந்து வாகனம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சேவையை முதல்வர் பழனிசாமி வரும் 26-ம் தேதி சென்னை யில் தொடங்கி வைக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடை பெறும் குற்றங்களைத் தடுக்கவும், வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x