Published : 23 Aug 2019 09:34 AM
Last Updated : 23 Aug 2019 09:34 AM

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் குமரி அனந்தன் உட்பட 200 பேர் கைது

சென்னை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட தைக் கண்டித்து தமிழகம் முழு வதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சத்திய மூர்த்தி பவன் முன்பு சாலை மறி யலில் ஈடுபட முயன்ற குமரி அனந் தன், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று காலை 10.30 மணி அளவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்டத் தலை வர்கள் சிவராஜசேகரன், கே.வீர பாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

சிதம்பரம் கைது செய்யப்பட்ட தைக் கண்டித்தும், பிரதமர் நரேந் திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோ ருக்கு எதிராகவும் அவர்கள் கோஷ மிட்டனர். 11 மணி அளவில் அவர் கள் ஊர்வலமாக திருவிக சாலை வழியாக அண்ணா சாலை தர்கா அருகே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவன் முன்பு திருவிக சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அதைத் தொடர்ந்து குமரி அனந் தன், கிருஷ்ணசாமி, கோபண்ணா உள்ளிட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டை அமீர் மஹால் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், ‘‘நிதி, உள்துறை போன்ற முக்கிய துறை களின் அமைச்சராக இருந்த ஒரு வரை சுவர் ஏறி குதித்து சிபிஐ கைது செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல். இது கடும் கண்டனத்துக்குரியது’’ என்றார்.

கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘மத்திய பாஜக அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசியலில் மூத்த தலைவரான ப.சிதம்பரம் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. அவரை அராஜ கமான முறையில் சுவர் ஏறிக் குதித்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியினரின் போராட் டம் காரணமாக திருவிக சாலை யில் சுமார் 30 நிமிடங்கள் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை யில் விடுவிக்கப்பட்டனர்.

சிதம்பரம் கைதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்ற முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

தமிழகம் முழுவதும்

சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் பெரியார் சிலை முன்பு மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையிலான 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட 200-க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். சேலத்தில் சுமார் 50 பேர், கிருஷ் ணகிரியில் 100 பேர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ வாலாஜா அசேன் உட்பட 30 பேரும், திட்டக்குடியில் 10 பேரும், ராஜபாளையத்தில் 25 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தேனியில் பங்களாமேட்டில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலை வர் ஹசன் ஆருண் தலைமையிலும், ராமநாதபுரம் அரண்மனை முன்பு முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏ மலேசியா பாண்டியன் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.

திருச்சியில் காங்கிரஸ் பேச் சாளர் திருச்சி வேலுச்சாமி, தஞ்சாவூரில் கிருஷ்ணசாமி வாண்டையார், வேதாரண்யத்தில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x