Published : 23 Aug 2019 09:15 AM
Last Updated : 23 Aug 2019 09:15 AM

ஓய்வூதியத் திட்டம் வெற்றிக்கு அஞ்சல் துறை காரணம் - விருது வழங்கும் விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் பாராட்டு

சென்னை

அரசின் ஓய்வூதியத் திட்டங்கள் வெற்றியடைந்ததற்கு அஞ்சல் துறைதான் காரணம் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.

அஞ்சல்துறையின் சென்னை மண்டல அளவில் சிறப்பாக பணி யாற்றிய அதிகாரிகள், ஊழியர் களுக்கு, விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் வரவேற்புரை யாற்றிய சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், “அஞ்சல்துறையின் சென்னை நகர மண்டல வளர்ச்சி கடந்த 2017-18-ல் ரூ.110.4 கோடியில் இருந்து 2018-19-ல் ரூ.166.26 கோடி யாக உயர்ந்துள்ளது. இது 50.6 சதவீத வளர்ச்சியாகும். விரைவுத் தபால், அதிவிரைவு பார்சல், வணிக பார்சல் மற்றும் பில் அஞ்சல்சேவை மூலமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” என்றார்.

ஊழியர்களுக்கு பரிசு

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம், அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:

கிராமப் பகுதிகளில் மத்திய அரசின் ஒரு சின்னமாக அஞ்சல கங்கள் திகழ்ந்தன. அஞ்சல் துறை தொடர்ந்து இயங்கி வருவதே ஓர் அதிசயமாக உள்ளது. அதிலும், தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் லாபம் ஈட்டுவது என்பது இரட்டை அதிசயமாக உள்ளது. தொழில்நுட்ப மாற்றம் காரணமாக, பல்வேறு துறைகள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டன. உதாரண மாக, போட்டோ ஸ்டுடியோக் கள், பிரின்டிங் பிரஸ்களை கூறலாம்.

கேள்விக்குறி

இந்தத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருவதே ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், இந்தத் துறை சோர்ந்து விடவில்லை. உங்களையே நீங்கள் மீண்டும் கண்டுபிடித்ததால், இன் றைக்கு பல்வேறு போட்டிகளையும் சமாளித்து அஞ்சல்துறை லாபத்தில் இயங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசின் ஓய்வூதியத் திட்டங்கள் வெற்றியடைந்ததற்கு அஞ்சல்துறைதான் காரணம். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு அஞ்சல் ஊழியர் கள்தான் அவர்களது வீட்டுக்கே தேடிச் சென்று ஓய்வூதியத்தை கொண்டுபோய் சேர்க்கின்றனர். ஆனால், இன்றைக்கு அரசின் திட்டங்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களை சென்றடைவதில் பிரச் சினை உள்ளது.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x