Published : 20 Aug 2019 06:57 AM
Last Updated : 20 Aug 2019 06:57 AM

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்: சேலத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரியை திறந்துவைத்து முதல்வர் பழனிசாமி தகவல்

சேலம்

சேலத்தில் புதிய அரசு சட்டக் கல் லூரியை திறந்துவைத்த முதல் வர் பழனிசாமி, ‘உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

சேலம் மணியனூரில் சேலம் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், அரசு சட்டத் துறை செயலர் ரவிக் குமார் வரவேற்றார்.

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த் துறை அமைச்சர் உதய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரியை திறந்து வைத்து, கல்லூரியில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவி களுக்கு சேர்க்கை கடிதத்தை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

புதிய சட்டக் கல்லூரிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு சேலம், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் புதிய சட்டக் கல்லூரி கள் தொடங்கப்படுகின்றன. இக்கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். புதிய சட்டக் கல்லூரிகளில் ஆரம் பக் கட்டப் பணிகளை மேற்கொள்வ தற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

கோவை, திருநெல்வேலி சட்டக் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை கள் கட்ட ரூ.7.70 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. தெற்காசியாவி லேயே சட்டக் கல்விக்காக தோற்று விக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகத்தில் ஆசியாவிலேயே குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக் கல்வி வழங்கப்படுகிறது.

இந்த சட்டப் பல்கலைக்கழகத் துக்காக, பெருங்குடியில் ரூ.62 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகமும் திறக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 13 சட்டக் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் அரசு கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் மொழி பெயர்ப்பு

கடந்த ஆண்டு விழுப்புரம், ராமநாதபுரம், தருமபுரி ஆகிய இடங்களில் புதிய சட்டக் கல் லூரிகள் தொடங்கப்பட்டன. அவற் றுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி விரைவாக நடைபெறும். ரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவால் உருவாக்கப்பட்டது. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

மின்னணு ஆளுமை முறை

உயர் நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீதிமன்றங்களில் மின்னணு ஆளுமை முறையை கொண்டுவர, மின்னணு முத்திரைத் தாள் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதித் துறையை கணினிமய மாக்குவதற்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் நீதிமன் றங்களில் நிலுவையில் உள்ள வழக் குகளை விரைவாக முடித்திட, பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன் றங்களின் தேவைக்கேற்ப அனைத்து உள்கட்டமைப்பு வசதி களையும் அரசு ஏற்படுத்தி வரு கிறது.

சேலம் அரசு சட்டக் கல்லூரிக் காக, சேலம் - கோவை நெடுஞ் சாலையில் விநாயகா மிஷன் அருகே இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. அந்த இடத்தில் புதிய சட்டக் கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சட்டத் துறை அமைச் சர் சண்முகம் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 10 ஆண்டுகளாக புதிய சட்டக் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. தற்போது 3 ஆண்டுகளில் புதிதாக 6 சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விழுப்புரம், ராமநாதபுரம், தருமபுரி ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட சட்டக் கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள் கட்ட தலா ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

சேலம் ஆட்சியர் ராமன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x