Published : 20 Jul 2015 08:45 AM
Last Updated : 20 Jul 2015 08:45 AM

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு: உலக மீனவர் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல் லப்பட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு உலக மீனவர் பேரவை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வலியுறுத் தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக உலக மீனவர் பேரவை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவை தலைவர் முகமது அலிஷா (பாகிஸ்தான்) தலைமை வகித்தார். இணைத் தலைவர் நாடியா (கரிபியன்), பொதுச்செயலாளர் நசீர் ஜாபர் (தென் ஆப்பிரிக்கா), தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ (இந்தியா), இலங்கை தலைவர் ஹெர்மன் குமாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கரிபீயன், ஹோண்டுராஸ், கனடா, கென்யா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் மீனவர்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மீன் பிடிப்பதையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மீனவர்கள் கடலில் வழி தவறி எல்லை தாண்டினால் அவர் களை கைது செய்து, சித்திரவதை செய் வதை 3 நாடுகளும் கைவிட வேண்டும்.

இலங்கைக்கு அருகில் மீன் பிடித்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டிய காரணத்தால் கொல்லப்பட்டுள் ளனர். வறுமையில் வாடும் அவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈட்டை அந்தந்த நாடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இலங்கை மீனவர் பேரவை நிர்வாகி ஹெர்மன் குமாரா கூறும்போது, ‘‘இலங்கை - இந்திய மீனவர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்க வேண் டும். தமிழக மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்துவதால் இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் 83 நாட்கள் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. எனவே, விரைவில் நடக்கவுள்ள நான்காவது சுற்று பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x