Published : 18 Aug 2019 08:18 AM
Last Updated : 18 Aug 2019 08:18 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்வு

சென்னை

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28 ஆயிரத்து 856-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. தங்கம் விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் நேற்றும் உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28,856-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,607-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,583-க்கு விற்பனை செய் யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x