Published : 17 Aug 2019 10:30 AM
Last Updated : 17 Aug 2019 10:30 AM

அத்திவரதருக்கு அணிவிப்பதற்காக 48 நாட்கள் பூமாலை கட்டியது எங்கள் பாக்கியம்: பரம்பரை பூக்காரர் பெருமிதம்

காஞ்சிபுரம்

அத்திவரதர் அணிவதற்காக 48 நாட்களும் மலர் மாலை கட்டியது நாங்கள் செய்த பாக்கியம் என பெருமையுடன் தெரிவித்தனர் பரம்பரையாக சுவாமிக்கு மாலை தயாரிக்கும் குடும்பத்தினர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் மலர் மாலைகளை பரம்பரை பரம்ரையாக ஒரு குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 48 நாட் களாக அத்திவரதர் அணிவதற் கென்று சிறப்பு மாலைகளை அவர்கள் நாள்தோறும் தயாரித்து வந்துள்ளனர்.

அத்திவரதர் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக சுவாமிக்கு ஏலக்காய், பாதம், மல்லி, சாமந்தி, அத்திப்பழம் உள்ளிட்டவற்றால் 48 நாட்களும் பல்வேறு வடிவங்களில் மாலைகள் தயாரிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதரின் அலங்காரத்துக்கு மாலைகள் தயாரிக்க கிடைத்த வாய்ப்பை தங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவ தாக அக்குடும்பத்தினர் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு பூமாலை தயாரிக்கும் பரம்பரை பூக்காரர் கமலா(65) கூறியதாவது: எனது கணவர் மாசிலாமணி குடும்பத்தார் இக்கோயிலுக்கு வம்சா வழியாக மாலைகள் தயாரித்து வருகின்றனர். கடந்த 1979-ம் வருஷம் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தின்போது சுவாமிக்கு சூட்ட எனது கையால் மாலைகள் தயாரித்தேன். இபோது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அத்திவரதருக்கு மாலைகள் தயாரிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

இம்முறை நாள் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மலர்களைக் கொண்டு பல்வேறு வடிவ மாலைகளைக் கட்டியுள்ளோம். எனது பேரன்கள் சுரேஷ், தினேஷ் ஆகியோர் இப்பணிளை தற்போது செய்து வருகின்றனர். நன்கொடையாளர்கள் வாங்கி தந்த மலர்களைக் கொண்டு நாங்கள் மாலைகள் தயாரித்து வழங்கினோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x