Published : 17 Aug 2019 08:36 AM
Last Updated : 17 Aug 2019 08:36 AM

தமிழகத்தை ஆளும் தார்மீக தகுதியை அதிமுக அரசு இழந்துவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு குற்றச்சாட்டு

தூத்துக்குடி

தமிழகத்தை ஆளும் தார்மீக தகுதியை அதிமுக அரசு இழந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம், தூத்துக்குடி யில் 2 நாட்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.அழகு முத்துபாண்டியன் தலைமை வகித் தார். அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செய லாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்பி, மூ.வீரபாண்டி யன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி உட்பட 100-க்கும் மேற்பட்ட மாநிலக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசியல் நிலவரங்கள், விவசாயிகள், தொழிலாளர் பிரச்சினைகள், பொருளாதார சூழ்நிலைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து 2 நாட்களும் விவாதங்கள் நடைபெற்றன. இதன் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தமிழ்நாடு அரசும், உளவுத் துறையும் சமூகவிரோதிகளின் நட வடிக்கைகளை கண்காணித்து, குற்றச் செயல்களை கட்டுப் படுத்தி பொதுமக்களை பாது காக்கும் திறனை முற்றிலும் இழந்து விட்டன. உள்துறைக்கு பொறுப் பேற்றுள்ள முதல்வர், ஜனநாயக இயக்கங்களையும், போராட்டங் களையும் காவல்துறையின் மூலம் ஒடுக்கி வருகிறார். ஆனால், முற்றி லும் சீர்குலைந்துவிட்ட சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தை காப் பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தச் சூழலில் பழனி சாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தை ஆளும் தார்மீக தகுதியை இழந்துவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலை உடனே நடத்த வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக விவசாயிகளைப் பாதிக்கிற, சுற்றுச்சூழலை மாசு படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும்.

மேலும் பொதுத்துறை, அரசு நிறுவனங்களை வஞ்சித்து தனியார் மயமாக்குதலை கைவிட வேண் டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மீண்டும் சட்டப்பேரவையில் சட்டவடிவை நிறைவேற்ற வேண் டும். பீடித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x