Published : 16 Aug 2019 09:33 AM
Last Updated : 16 Aug 2019 09:33 AM

பேருந்து வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பள்ளிக்கு நடந்து வரும் குழந்தைகள்: தீர்வு காண திருப்பூர் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூர்

பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால், பள்ளிக்கு நடந்து வரும் அரசுப் பள்ளி குழந்தைகளுக் காக பேருந்து வசதிகோரி திருப்பூர் மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. காங் கயம் ஒன்றியம் பழைய கோட்டை கிராம சபைக் கூட்டம் பழைய கோட்டைப்புதூரில் நடைபெற்றது. பழைய கோட்டைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் அமைவிடத் தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் வெங்கரையாம்பாளையம் உள் ளது. இவ்வூரில் இருந்து 40 குழந் தைகள் பழைய கோட்டைப்புதூரில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கடந்த பல ஆண்டுகளாக அன்றாடம் 3 கி.மீ. தூரம் நடந்தே வருகின்றனர். இதனால் பள்ளிக் குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக் கடி விடுமுறையும் எடுக்கின்றனர். எனவே வெங்கரையாம்பாளையத் தில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பட்டம்பாளையம் ஊராட்சியில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட குழிகள் அப்படியே போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே கழிவறை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அலங்கியத்தில் ஊழல்?

புஞ்சய்தளவாய்பாளையம் ஊராட்சியில் விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கும் வகை யில் உயர் அழுத்த மின் கோபுரத் திட் டத்தை விளைநிலங்கள் வழியாக செல்லாமல், சாலையோரம் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும். தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாராபுரம் வட்டம் அலங்கியம் ஊராட்சியில், தண்ணீர்குழாய் மற்றும் பொதுக்கழிப்பிட வசதி, தனிநபர் கழிப்பறை வசதி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைப்பது தொடர்பாக ரூ. 3 கோடி அளவுக்கு அரசு பணத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த ஊராட்சி செயலரிடம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் எழுந்தது.

ஆட்சியர் அழைப்பு

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வரும் ஜன. 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2020 நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சரிபார்த்தல், திருத்தம் செய்தல், இறப்பு மற்றும் குடி பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற பணிகளை தாங்களே செய்து கொள்ளும் வகையில், செப். 1-ம் தேதி முதல் வாக்காளர் சரி பார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இப்பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சரி பார்க்கும் பணியின்போது கேட்கும் விவரங்களை பொதுமக்கள் அளித்திட வேண்டும் என்றார்.புஞ்சய்தளவாய்பாளையம் ஊராட்சியில் விவசாயிகளின் நில உரிமையை பாதிக்கும் வகையில் உயர் அழுத்த மின் கோபுரத் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செல்லாமல், சாலையோரம் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x