Published : 16 Aug 2019 07:46 AM
Last Updated : 16 Aug 2019 07:46 AM

காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில் டி.ராஜா புகார்

தூத்துக்குடி

பல்வேறு முக்கிய பிரச்சினை களில் இருந்து நாட்டு மக்க ளின் கவனத்தை திசை திருப் பவே, மத்திய அரசு காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத் துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று தொடங் கியது. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்து பாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார். கூட்டம் நடைபெறும் மண்ட பத்துக்கு வெளியே தேசிய கொடியை டி.ராஜா ஏற்றி வைத் தார்.

இதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு தெளிவுபடுத்த வேண்டும்

370-வது அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்வதாக கூறி, ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தையே இன்று இல்லா மல் ஆக்கிவிட்டனர். இது ஜனநாய கத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாகும். ஜம்மு- காஷ்மீரில் அமைதி நிலவவில்லை. மக்கள் கொந்தளிப்போடுதான் இருக்கிறார்கள்.

அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. அங்கு எப்போது தேர்தல் நடத்த விருக்கிறார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள முடிவு ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக எடுத்த முடிவா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்காக எடுக் கப்பட்ட முடிவா என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

நலிந்து போயிருக்கும் பொரு ளாதாரம், பெருகி வரும் வேலை யில்லா திண்டாட்டம், விவசாய துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவை பற்றி மக்கள் பேசக் கூடாது. அதற்கு மாறாக தேசியம், தேச பாதுகாப்பு, ஜம்மு-காஷ்மீர் என்ற பெயரால் நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு டி.ராஜா பேசினார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலை வர்கள் இரா.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்பி, மூ.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாலை யில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

மாநிலக் குழு கூட்டம் இன்றும் நடைபெறுகிறது. இதில் மத்திய, மாநில அரசியல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x