Published : 16 Aug 2019 07:07 AM
Last Updated : 16 Aug 2019 07:07 AM

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயில்களில் பொது விருந்து: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை 

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயில்களில் நடைபெற்ற பொது விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொது விருந்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பொது விருந் தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். முன்னதாக, ரக்ஷாபந்தனை முன்னிட்டு முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நடை பெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். தொடர்ந்து இலவச வேட்டி, சேலை வழங்கினார்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மயிலாப் பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கந்தகோட்டம் முருகன் கோயிலில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட சென்னை முழுவதும் 33 கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x