Published : 15 Aug 2019 10:51 AM
Last Updated : 15 Aug 2019 10:51 AM

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவது குறித்த வழிகாட்டு தல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு:

மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாட வாரியாக அகமதிப்பீடு வழங்கு வது குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பெற்றுக் கொண்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அதன்படி தொழிற்கல்வி செய்முறை தவிர்த்த இதர பாடங்களுக்கு அகமதிப்பீடாக 10 மதிப்பெண் வழங்க வேண்டும். இதில் மாணவரின் அதிகபட்சம் வருகைப்பதிவுக்கு 2 மதிப்பெண், உள்நிலை பருவத் தேர்வுகளுக்கு 4, ஒப்படைவு, களப்பணிக்கு 2 மற்றும் மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம் உட் பட கல்வி இணை செயல்பாடு களுக்கு 2 மதிப்பெண் ஒதுக்க வேண்டும்.

நடுநிலையுடன் வழங்குக

இதேபோல், தொழிற்கல்வி செய்முறை உள்ள பாடத்துக்கு அகமதிப்பீடாக 25 மதிப்பெண் கள் அளிக்க வேண்டும். அதில் அதிகபட்சம் வருகைப்பதிவுக்கு 5 மதிப்பெண், பருவத் தேர்வு களுக்கு 10, ஒப்படைவு, களப் பணிக்கு 5 மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கு 5 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த அறி வுறுத்தல்களை பின்பற்றி ஆசிரி யர்கள் நடுநிலையுடன் அகமதிப் பீடு வழங்க வேண்டும்.

மாணவர்கள் பெறும் மதிப் பெண் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். மேலும், அகமதிப்பீடு விவரங் களை தகவல் பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x